AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உயிருக்கு போராடிய குட்டி யானைக்கு வன்தாராவில் சிகிச்சை! ஆனந்த் அம்பானிக்கு அசாம் முதல்வர் பாராட்டு

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் செயல்பட்டு வரும் வன்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் ஆனந்த் அம்பானி, கால் எலும்பு முறிவு ஏற்பட்ட யானை குட்டியின் சிகிச்சைக்காக இந்த சிறப்பு விமான பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக அசாம் மாநில முதல்வர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

உயிருக்கு போராடிய குட்டி யானைக்கு வன்தாராவில் சிகிச்சை! ஆனந்த் அம்பானிக்கு அசாம் முதல்வர் பாராட்டு
குட்டி யானை ராஜா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Nov 2026 21:13 PM IST

அசாமில் பிறந்த முதல் நாளிலேயே கால் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டு, கடந்த 7 வாரங்களாக உயிருக்கு போராடி வந்த யானைக்குட்டி ராஜாவுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில் ஆனந்த் அம்பானி உதவிக்கரம் நீட்டியுள்ளார். இதையடுத்து, ராஜாவை மேல் சிகிச்சைக்காக அசாமில் இருந்து குஜராத்தில் உள்ள வன்தாரா விலங்குகள் நல மருத்துவமனைக்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

யானைக்குட்டி ராஜாவுக்கு உதவிக்கரம் நீட்டிய அனந்த் அம்பானி

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் செயல்பட்டு வரும் வன்தாரா விலங்குகள் மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் ஆனந்த் அம்பானி, ராஜாவின் சிகிச்சைக்காக இந்த சிறப்பு விமான பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்தியாவில் யானைகளுக்காக அனந்த் அம்பானி உதவியுடன் மேற்கொள்ளப்படும் 3வது சிறப்பு விமானப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அசாமில் இருந்து குஜராத்துக்கு சாலை வழியாகச் சென்றால் 2,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடக்க வேண்டும். ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு, மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் 7 வார யானைக்குட்டிக்கு இவ்வளவு நீண்ட சாலைப் பயணம் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் விமானம் மூலம் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

ஆனந்த் அம்பானிக்கு அசாம் முதலமைச்சர் பாராட்டு

 

குட்டியானை ராஜாவை குஜராத்துக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் உதவியுள்ளார். ராஜாவின் உரிமையாளர் போலாநாத் பெகுவின் கோரிக்கையைத் தொடர்ந்து, வன்தாரா நிர்வாகத்தை அவர் தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார். இதையடுத்து ராஜாவை ஜாம்நகரில் உள்ள வன்தாரா மறுவாழ்வு மையத்திற்கு சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அசாம் முதலமைச்சர், “குட்டி யானை ராஜாவின் உரிமையாளர் போலாநாத் பெகுவின் கோரிக்கையை ஏற்று வன்தாரா அமைப்பைத் தொடர்புகொண்டேன். அவர்கள் உடனடியாக உதவ முன்வந்து, சிறப்பு சிகிச்சைக்காக நவம்பர் 20, 2026 இன்று காலை ராஜாவை ஜாம்நகரில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு விமானம் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது ராஜா சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைத்து வருகிறான். இந்த உதவியை செய்த அனந்த் அம்பானி மற்றும் வன்தாரா குழுவினருக்கு பாராட்டுகள். ராஜா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிறந்த முதல் நாளிலேயே ஏற்பட்ட கால் எலும்பு முறிவு

அசாம் மாநிலம் கோகாமுக் பகுதியில் கடந்த 2026 அக்டோபர் 2ஆம் தேதி ராஜா பிறந்தது. அப்போது அதன் தாய்க்கு வெறும் 11 வயதுதான். முதல் பிரசவம் என்பதால் அனுபவமின்மை மற்றும் அச்சம் காரணமாக, குட்டி பிறந்த சிறிது நேரத்திலேயே தாய் யானை அதனை எட்டி உதைத்துள்ளது. இதனால் ராஜாவின் வலது பின்னங்காலில் உள்ள தொடை எலும்பு முழுமையாக முறிந்தது

மேலும், பிறந்தவுடன் தாயிடமிருந்து கிடைக்க வேண்டிய தாய்ப்பாலும் அதற்குக் கிடைக்கவில்லை. இதனால் ராஜாவின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. ஜாவின் நிலையை உணர்ந்த அதன் உரிமையாளரும் பராமரிப்பாளர்களும் வன்தாரா அமைப்பின் உதவியை நாடினர். இதையடுத்து அக்டோபர் 8ஆம் தேதி வன்தாராவின் அவசரகால மீட்புக் குழுவினர் ராஜாவைச் சென்றடைந்தனர்.

ராஜாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், தீவிர மருத்துவக் கண்காணிப்பு மற்றும் சிறப்பு எலும்பியல் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து நவம்பர் 20ஆம் தேதி கவுகாத்தியில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்கு ராஜாவை அழைத்துச் செல்ல சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடைபெறும் இந்தப் பயணத்திற்காக ராஜாவின் உடல் அளவுக்கு ஏற்ற வகையில் பிரத்யேகப் பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Follow Us