பெண் தர மறுத்ததால் ஆத்திரம்.. வீடு புகுந்து காதலி, பாட்டி படுகொலை.. கோவையில் பயங்கரம்!!
Terrific incident in Coimbatore: மீண்டும் நேற்று மாலை அபிஷேக், கவுசியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். அதற்கு கவுசி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர், முன்கூட்டியே தான் கொண்டு வந்திருந்த கத்தியால் கவுசியை பலமுறை குத்தினார்.

மாதிரிப் புகைப்படம்
கோவை, பிப்ரவரி 24: கோவை அருகே, திருமணத்திற்கு பெண் தர மறுப்பு தெரிவித்த ஆத்திரத்தில், இளம் பெண்ணையும் அவரது பாட்டியையும் குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர். இன்றைய சமூகத்தில் காதல் உறவுகள் அதிகரித்து வரும் நிலையில், அதனைச் சுற்றியுள்ள பொறுப்புணர்வு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறைவாக இருப்பது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இளம் வயதில் எடுக்கப்படும் அவசரமான முடிவுகள் மற்றும் கோபத்தின் விளைவுகள் எவ்வளவு பேரழிவை ஏற்படுத்த முடியும் என்பதை இந்த சம்பவம் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
மேலும் படிக்க: சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை.. அதிரடி தீர்ப்பு!!
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி:
கோவை மாவட்டம் நெகமம் அருகிலுள்ள கொண்டேகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த பூபதி இருசக்கர வாகன பணிமனை நடத்தி வருகிறார். அவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு ஹரிதா (18), கவுசி (16) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். பூபதியின் தாய் மயிலாத்தாள் (65) அவர்களும் இதே வீட்டில் வசித்து வந்தார். கவுசி பள்ளிப் படிப்பை நிறுத்திய பிறகு, அருகிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
காதலாக மாறிய நட்பு:
அப்போது நெகமம் குப்பம்பாளையத்தைச் சேர்ந்த அபிஷேக் (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு பின்னர் காதலாக மாறியது.இந்த உறவை பூபதி எதிர்த்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அபிஷேக் தனது குடும்பத்தினருடன் கவுசியை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார். ஆனால், கவுசி சட்டப்படி திருமண வயதை எட்டாததால், அவரது குடும்பத்தினர் அந்த முன்மொழிவை நிராகரித்தனர்.
வீடு புகுந்து கொலை:
இந்நிலையில், நேற்று மாலை சுமார் 7.15 மணியளவில், அபிஷேக் கவுசியின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தினார். அதற்கு கவுசி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அவர், முன்கூட்டியே கொண்டு வந்திருந்த கத்தியால் கவுசியை பலமுறை குத்தினார். அவரது அலறலைக் கேட்டு தடுக்க முயன்ற பாட்டி மயிலாத்தாளையும், அக்காள் ஹரிதாவையும் அபிஷேக் கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதையும் படிக்க: குடும்பத்தையே சீர்குலைத்த புற்றுநோய்.. மனைவி மீதான அதீத பாசத்தால் விபரீத முடிவு.. தந்தை, மகன் பலி!!
இருவர் பலி, ஒருவருக்கு தீவிர சிகிச்சை:
பின்னர், காயமடைந்த மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் மயிலாத்தாள் மற்றும் கவுசி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். ஹரிதா தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவான அபிஷேக்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.