Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாஜக மாநில தலைவர் யார்? சென்னை வரும் அமித் ஷா.. சீனியர் தலைவர்களுடன் முக்கிய மீட்டிங்!

Amit Shah Chennai Visit : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2025 ஏப்ரல் 10ஆம் தேதி இரவு சென்னை வர உள்ளார். சென்னை வரும் அமித் ஷா, கூட்டணி குறித்தும், பாஜக மாநில தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

பாஜக மாநில தலைவர் யார்? சென்னை வரும் அமித் ஷா.. சீனியர் தலைவர்களுடன் முக்கிய மீட்டிங்!
அமித் ஷா - அண்ணாமலைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 10 Apr 2025 08:03 AM

சென்னை, ஏப்ரல் 10: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah Tamil nadu visit) 2025 ஏப்ரல் 10ஆம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஏப்ரல் 10ஆம் தேதி இரவு அமித் ஷா சென்னை வருகிறார். இவரது வருகையில் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தலாம் என கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் யார் என்பது குறித்தும், பாரதிய ஜனதா கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

பாஜக மாநில தலைவர் யார்?

இன்னும் தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, அதிமுக கூட்டணி பேச்சுவார்ததையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதாவது, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அதன்பிறகு 2024 லோக்சபா தேர்தலில் பாஜக அதிமுக வெவ்வேறு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், அந்த தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெற்றது. இது அதிமுகவுக்கு பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதனால், 2026 சட்டப்பேரவை தேர்தலில்  அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்புகள் அதிகமாக  உள்ளது. அதற்கான ஆலோசனையும்  பாஜக மேலிடம் தீவிரமாக நடத்தி வருகிறது.  சொல்லப்போனால்,  இந்த கூட்டணிக்காக தான் பாஜக மாநில  தலைவர் மாற்றப்படுகிறார்.

அதாவது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இணக்கமான பேச்சுவார்த்தைகள் கிடையாது. அதுமட்டுமில்லாமல், இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால், இது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என மேலிடம் கருதுகிறது.

சென்னை வரும் அமித் ஷா

இதனால், பாஜக மாநில தலைவர் மாற்றி, கூட்டணி அமைக்க முடிவு எடுத்துள்ளது.  பாஜக மாநில தலைவர் ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன்,  கருப்பு முருகானந்தம்  என சீனியல் தலைவர்கள் இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் இந்த ரேஸில்  தான் இல்லை என அண்ணாமைலை கூறிவிட்டார்.

எனவே, அடுத்த பாஜக மாநில தலைவர் தேர்வு  செய்வது குறித்து  மேலிடம் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  இந்த சூழலில் தான் மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2025 ஏப்ரல் 10ஆம் தேதியான இன்று இரவு  சென்னை வர உள்ளார். சென்னை விமான நிலையத்தில் இரவு 10.15 மணிக்கு வரும் அமித் ஷா, அங்கிருந்து கிண்டியில் உள்ள ஹோட்டலுக்கு செல்கிறார்.

அங்கு எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தவைர்களுடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து, 2025 ஏப்ரல் 11ஆம் தேதி பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்து பாஜக மாநில தலைவர் நியமனம் குறித்து ஆலோசிக்கலாம் என தெரிகிறது. இதனால், இரு தினங்களில் பாஜக மாநில புதிய தலைவர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.