AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

43 ஆகக் குறைந்த அதிமுக பலம்… உட்கட்சி பூசலால் 4 MLAக்கள் இழப்பு.. 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

இந்த அரசியல் சூழலுக்கு மத்தியில், சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. கடந்த 25ஆம் தேதி ஜெயகுமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.

43 ஆகக் குறைந்த அதிமுக பலம்… உட்கட்சி பூசலால் 4 MLAக்கள் இழப்பு.. 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 May 2026 08:56 AM IST

சென்னை, மே 28: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவில் நீடித்து வந்த அடுத்தடுத்த உட்கட்சி அரசியல் குழப்பங்கள் தற்போது ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளன. எனினும், இந்த அதிகாரப் போட்டியின் உச்சகட்டமாக அதிமுக தனது 4 முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களை இழந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, அதிமுக-வுக்குள் பெரும் பிளவு ஏற்பட்டது. கட்சித் தலைமைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி ஒரு தரப்பாகவும், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மற்றொரு தரப்பாகவும் பிரிந்து செயல்பட்டு வந்தனர்.

இதையும் படிக்க: “திமுக vs அதிமுக காலம் முடிந்தது?”.. தவெகவின் அசுர வளர்ச்சி.. உடைத்துப் பேசிய கே.என்.நேரு!!

தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள்:

கடந்த மே 13-ஆம் தேதி, தவெக அரசின் மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இந்த பிளவு வெளிப்படையாகத் தெரிந்தது. சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதே சமயம், இபிஎஸ் தரப்பில் இருந்த 22 எம்எல்ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

அடுத்தடுத்து ராஜினமா; தவெக-வில் ஐக்கியம்:

இந்த அரசியல் சூழலுக்கு மத்தியில், சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த முக்கிய விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. கடந்த 25ஆம் தேதி ஜெயகுமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். மறுபுறம், சி.வி.சண்முகம் தரப்பில் இருந்த சில எம்.எல்.ஏ-க்களும் இபிஎஸ்-க்கு ஆதரவாக அணி மாறத் தொடங்கினர்.

சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சி:

கட்சி முழுமையாக சிதைந்து போவதைத் தடுக்கும் நோக்கில், அதிமுக-வின் உட்கட்சிப் பூசலை முடிவுக்குக் கொண்டு வர அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எஸ்.பி.வேலுமணி தலைமையில் 10 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சுமுகப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அவர்கள் மீண்டும் அதிமுக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இந்த முக்கிய சந்திப்பில் சி.வி.சண்முகம் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவரும் தங்களது பக்கமே (அதிமுக-விலேயே) நீடிப்பதாக எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: மீண்டும் ஒன்றிணையும் அதிமுக? இரண்டு அணிகளுக்கு இடையே சமரசம்.. சி.வி. சண்முகம் வைத்த கோரிக்கை

அதிமுக-வுக்கு இழப்பு, வரவிருக்கும் இடைத்தேர்தல்:

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்த அதிமுக, தங்களுக்குள் நிலவிய உட்கட்சிப் பூசலால் தற்போது 4 எம்.எல்.ஏ-க்களை இழந்து 43 ஆகக் குறைந்துள்ளது. ஏற்கனவே காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் தற்போது அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துள்ள தொகுதிகளையும் சேர்த்து, தமிழகத்தில் மொத்தம் 5 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகியுள்ளன. இதனால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயச் சூழல் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது.

Follow Us