பரப்புரைக்கு நடுவில் ஆம்புலன்ஸ்.. டென்ஷனான இபிஎஸ்.. பகிரங்க எச்சரிக்கை!
Edappadi Palaniswami Campaign : வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆன்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டல் விடுத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பரப்புரைக்கு நடுவில் ஆம்புலன்ஸ் அனுப்பி பரப்புரைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டி உள்ளார்.

வேலூர், ஆகஸ்ட் 19 : வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு பகுதியில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி பரப்புரைக்கு (Edappadi Palaniswami Campaign) இடையூறு ஏற்படுத்தியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) குற்றச்சாட்டி இருக்கிறார். அதோடு, எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இனி ஆள் இல்லாத ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுனரே நோயாளியாக அனுப்பப்படுவார் என எடப்பாடி பழனிசாமி மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றர். முதற்கட்ட பரப்புரையை முடிந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது இரண்டாம் கட்ட பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.




பல்வேறு மாவட்டங்களில் மக்களை சந்தித்து பேசியும் வருகிறார். அந்த வகையில், 33வது நாளாக வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 2025 ஆகஸ்ட் 18ஆம் தேதியான நேற்று பரப்புரை மேற்கொண்டார். எடப்பாடி பழனிசாமி அணைக்கட்டு பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே 2025 ஆகஸ்ட் 18ஆம் தேதியான நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும்போது, அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்துவிட்டதால், பேச்சை நிறுத்திவிட்டு, ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இல்லை என அவருக்கு தெரிந்தது.
Also Read : கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்… உறுதியாக சொன்ன நயினார் நாகேந்திரன்.. நீடிக்கும் குழப்பம்!
ஓட்டுநருக்கு பகிரங்க எச்சரிக்கை
திமுகவின் தூண்டுதல் பெயரில் மருத்துவமனைக்கு வேறு வழி இருந்தும் நோயாளி இல்லாத ஆம்புலன்சை கூட்டத்திற்குள் கொண்டுவந்து பிரச்சனை உண்டாக்க பார்த்த நபரை ஒட விட்ட எடப்பாடியார்
திமுக அரசுக்கு எச்சரிக்கை அடுத்த தடவை ஆள் இல்லாத ஆம்புலன்ஸ் வந்தா ஒட்டிட்டு வரவரு Patient ஆயிடுவாரு !😂🔥 pic.twitter.com/JckQ4Anp3d
— Phoenix Vignesh (@PhoenixAdmk) August 18, 2025
இதனால், எடப்பாடி பழனிசாமி கோபமடைந்து, பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். அவர் பேகையில், “அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை. ஒவ்வொரு பரப்புரைக்கு நடுவிலும் ஆம்புலன்ஸை விட்டு பிரச்னை செய்து கொண்டு இருக்கிறார்கள். இதுதான் திமுகவின் கேவலமாக செயலாகும். இந்த ஆன்புலன்ஸில் நோயாளிகள் இல்லை.
நான் பேசிய 30 கூட்டங்களிலும் ஆன்புலன்ஸை இடையூறாக விட்டு உள்ளனர். இதனால், எச்சரிக்கை விடுக்கிறேன். அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால், அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியாக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும்” என தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக வேகமாக பரவி வருகிறது.
Also Read : கிருஷ்ணகிரியில் மக்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி.. 3 ஆம் கட்ட பிரச்சார பயணத்திட்டம் என்ன?
அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதாவது, நோயாளி ஒருவரை ஏற்றவே அங்கு சென்றதாக அவர் விளக்கம் அளித்தார். அந்த வழிதான் எளிமையான வழி என்பதால், அப்படியாக சென்றதாக ஓட்டுநர் விளக்கம் அளித்தார். இதற்கிடையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்து பேசுகையில், “ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை நடத்திவிட்டு தான் வரும்போது ஆம்புலன்ஸ் விடப்படுவதாக சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஒரு முன்னாள் முதல்வர் மிரட்டும் தொணியில் பேசுவது அநாகரீக செயல். அவர் இதோடு நிறுத்திக் கொள்வது நல்லது” என தெரிவித்தார்.