செங்கோட்டையனின் கட்சி பொறுப்பு பறிப்பு.. அதிமுக தலைமை அறிவிப்பு!

AIADMK Former Minister Sengottaiyan : அதிமுக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார்.

செங்கோட்டையனின் கட்சி பொறுப்பு பறிப்பு.. அதிமுக தலைமை அறிவிப்பு!

செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி

Updated On: 

06 Sep 2025 12:42 PM

 IST

சென்னை, செப்டம்பர் 06 : அதிமுக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் செங்கோட்டையன் கெடு விதித்திருந்த நிலையில், தற்போது அவரை கட்சி பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்கு, பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக,கோஷ்டி மோதல்கள் நடந்தன. இதனால், எடப்பாடி பழனிசாமி கையில் கட்சி வரவே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆயோர் தனித்தனி அணிகளாக இருந்து வருகின்றனர்.

எனவே, இப்படி கட்சிகள் பிரிந்து இருப்பதால் தான், தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என அதிமுகவில் உள்ள சீனியர் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையில்,  அதிமுகவில் உட்கட்சி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை செங்கோட்டையன் தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறார். ஈரோடுக்கு வந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அவரை வரவேற்கவில்லை.

Also Read : ’நயினார் நாகேந்திரன் சரியில்ல’ கூட்டணி விவகாரத்தில் தினகரன் பகீர் குற்றச்சாட்டு

பிரிந்து கிடக்கும் அதிமுகவில் முக்கிய தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற மனநிலையில் செங்கோட்டையன் இருந்து வருகிறார். அதற்கு கட்சி தலைமையே செவி சாய்க்காமல் இருந்து வந்தது. இது தொடர்பாக மவுனம் காத்து வந்த செங்கோட்டையன், 2025 செப்டம்பர் 5ஆம் தேதி பத்திரியாளர்கள் சந்திப்பில் மனதில் இருப்பதை பேசுவேன் என கூறியிருந்தார். அதன்படியே, 2025 செப்டம்பர் 5ஆம் தேதியான நேற்று பேட்டி அளித்தார்.

செங்கோட்டையனின் கட்சி பொறுப்பு பறிப்பு


அப்போது,  அதிமுகவை ஒன்றிணைக்க 10 நாட்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.  10 நாட்களுக்கு அதிமுகவை ஒன்றிணைக்காவிட்டால், அதற்கான நடவடிக்கையை நாங்கள் தொடர்வோம் என திட்டவட்டமாக கூறியிருந்தார்.  இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது, செங்கோட்டையன்  அதிமுக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார்.

Also Read : ‘ஒன்றுபடுவோம்… வெற்றி நிச்சயம்’ செங்கோட்டையன் பேச்சுக்கு சசிகலா, ஓபிஎஸ் பதில்!

இந்த நிலையில், இந்த பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை, எடப்பாடி பழனிசாமி நீக்கி அறிவிப்பை வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைக்கு பதில் அளித்த செங்கோட்டையன், “தர்மம் தழைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் பிரிந்தவர்கள் இணைய வேண்டும் என கோரினேன். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தான் கருத்து கூறினேன். பொறுப்புகளில் இருந்து நீக்கியது வேதனை இல்லை. மகிழ்ச்சி தான்” எனக் கூறினார்.