Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

AIADMK : மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!

Edappadi Palaniswami Discussion With District Secretaries | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 30,2025) ஆலோசனை மேற்கொள்கிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவின் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

AIADMK : மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Jun 2025 17:36 PM

சென்னை, மே 30 : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 30, 2025) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இன்று காலை மற்றும் மாலையில் நடைபெற உள்ள கூட்டத்தில் 40 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரண்டாவது நாளாக நடைபெற உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று (மே 29, 2025) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த இரண்டு நாட்கள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி, 2026 சட்டமன்ற தேர்தல், மாநிலங்களவை உறுப்பினர் பதவி, பூத் கமிட்டி உள்ளிட்ட பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது. அதனை தொடந்து இன்று (மே 30,2025) நடைபெறும் கூட்டத்திலும் முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இது தற்போதையெ செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றனர்.