கிருஷ்ணகிரி முதல் செங்கல்பட்டு வரை… எடப்பாடி பழனிசாமியின் 3 ஆம் கட்ட பயண விவரம்
AIADMK Statewide Campaign : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தனது மூன்றாம் கட்ட பயணத்தை கிருஷ்ணகிரியில் இருந்து துவங்குகிறார். அவரது பயண விவரம் குறித்து பார்க்கலாம்.

எடப்பாடி பழனிசாமி
சென்னை, ஆகஸ்ட் 1 : வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக (ADMK) பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (Edappadi K Palaniswami), ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரது மூன்றாவது கட்ட பயணம் வரும் ஆகஸ்ட் 11, 2025 அன்று கிருஷ்ணகிரியில் தொடங்குகிறது. இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த 3 ஆம் கட்ட பயணம் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 23, 2025 வரை நடைபெறவுள்ளது. இந்த எழுச்சிப் பயணம் மாவட்ட வாரியாகவும், சட்டமன்றத் தொகுதி அடிப்படையிலும் நடத்தப்படவிருக்கிறது.
அதிமுக மாவட்ட கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எழுச்சிப் பயணத்துக்கான அனைத்துப் பாதுகாப்பு மற்றும் பொது விழா ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணத்தின் போது, மாவட்டத் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சட்டப்பூர்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க : O Panneerselvam: பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்..
பயணத்தின் முக்கிய நோக்கம்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் சென்று வியாபாரிகளை, விவசாயிகளை, தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை கேட்டறிதல், மக்கள் மத்தியில் அதிமுகவின் வளர்ச்சி திட்டங்களை எடுத்துரைத்தல் மற்றும் தற்போதைய அரசின் பிரச்னைகளை மக்களுக்கு சுட்டிக்காட்டுதல் ஆகியவை கூறப்படுகிறது. இப்பயணம், 2026-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முன் ஆய்வாகவும், அதிமுகவின் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : ’ஜெயலலிதா செய்தது வரலாற்று பிழை’ கடம்பூர் ராஜு பேச்சால் சலசலப்பு!
கோவில்பட்டியில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
தங்கள் ஊருக்கே உரித்தான கடலைமிட்டாய் போன்றே இனிமையான #கோவில்பட்டி தொகுதி மக்கள் பேரன்போடு வரவேற்றனர்.@BJP4TamilNadu மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களுடன் இணைந்து, மக்களின் வரவேற்பை மகிழ்வோடு பெற்றேன்.
மக்களின் எண்ணங்களை ஈடேற்றும் மக்களுக்கான ஆட்சியாக… pic.twitter.com/vdw4TFA70S
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) August 1, 2025
இந்த நிலையில் கோவில்பட்டியில் பேசிய எடப்பாடி கே.பழனிசாமி, தாமிரபரணி – வைப்பாரு திட்டத்தை திமுக அரசு கைவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டம் நிறைவேற்றப்படும். அதிமுக ஆட்சியில் தீப்பெட்டிக்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் 5 சதவீதம் வரி நீக்கப்பட்டது. மேலும் மத்திய அரசினை வலியுறுத்தி பிளாஸ்டிக் லைட்டர் தடை செய்ய அதிமுக முயற்சி எடுக்கும் என்று தெரிவித்தார்.