நாய்களை சுதந்திரமாக விட வேண்டும்…. அது அரசின் கடமை – அரசுக்கு நிவேதா பெத்துராஜ் கோரிக்கை
Nivetha Pethuraj Supports Stray Dogs : தமிழகத்தில் தெரு நாய்களால் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாட்டு விலங்குகளை காக்க வேண்டும் என்ற நோக்கில் தனியார் அமைப்பின் ஊர்வலத்தில் கலந்து கொண்ட நடிகை நிவேதா பெத்துராஜ், நாய்களை பாதுகாப்பது அரசின் கடமை என்றார்.
நாடு முழுவதும் தெரு நாய்களால் (Stray Dogs) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெரு நாய் கடித்து ரேபிஸ் (Rabies) வந்து இறப்பதும், தெரு நாய் குறுக்கே வந்து விபத்துகள் ஏற்படுவதும் என தினமும் எதாவது செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்க விடுத்து வருகின்றனர். மற்றொரு பக்கம் தெரு நாய்களுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், இது தொடரபாக கடந்த நவம்பர் 7, 2025 அன்று இது குறித்து உச்சநீதிமன்றம் (Supereme Court) வழங்கிய உத்தரவில், அனைத்து மாநில அரசுகளும் நெடுஞ்சாலைகள், சாலைகளில் இருந்து தெரு நாய்களை அகற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்தது.
‘2 மாதங்களில் நாய்களை அப்புறப்படுத்த முடியாது’
இதனையடுத்து நாய் ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டு நாய்களை காப்பது தொடர்பாக தனியார் நிறுவனம் நடத்திய ஊர்வலத்தில் ஏராளமான நாய் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் தனது கருத்தை முன் வைத்தார். அவர் பேசியதாவது, 2 மாதங்களில் நாய்களை காப்பகத்தில் இட வேண்டும் என்பது நடக்காத காரியம். என்றார்.




இதையும் படிக்க : ‘ஓயாத ரீல்ஸ் மோகம்’.. எச்சரிக்கையை மீறி திருச்செந்தூர் கோவிலில் நடனமாடிய இளைஞர்கள்!!
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் மட்டும் நான்கரை லட்சம் நாய்கள் இருக்கிறது. இன்னும் காப்பகம் கட்டவே தொடங்கவில்லை. குறைந்தபட்சம் 2,500 காப்பகங்களாவது கட்ட வேண்டும். நாய்களை பராமரிக்க ஆட்கள் வேண்டும். இந்த வேலைகளை எல்லாம் 2 மாதங்களில் செய்ய முடியாது. அதற்குள் தடுப்பூசி செலுத்துவது எல்லாம் முடியாத காரியம். இன்னும் காலம் வேண்டும்.
நாய்களுக்கு ஆதரவாக களமிறங்கும் நிவேதா
View this post on Instagram
‘நாய்களை சுதந்திரமாக விட வேண்டும்’
அதற்கு பதிலாக நாய்களை பிடித்து போய், அதற்கு தடுப்பூசி செலுத்தி, முறையாக அதனை பிடித்த இடத்திலேயே விட வேண்டும். நாய்களை சுதந்திரமாக விட வேண்டும். இது ஜனநாயக நாடு. மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயரினங்களுக்கும் தான்.
எனக்கும் தெரு நாய்களைப் பார்த்தால் பயம் வரும். நானும் சாலையில் செல்லும்போது பயந்திருக்கிறேன். அதற்காக அதனை முழுமையாக அகற்றுவது சரியில்லை. முறையாக தடுப்பூசி செலுத்த வேண்டும். அது அரசின் கடைமை. அரசு மட்டும் செய்ய முடியாது. அவர்களுக்கு வேறு வேலைகள் இருக்கிறது. இதற்காக அரசு தன்னார்வலர்களுடன் கைகோர்க்க வேண்டும்” என்றார்.
இதையும் படிக்க : “முழு பணத்தை கொடுத்தும் கிடைக்காத பைக்!” – நுகர்வோர் புகாருக்கு ரூ.1.64 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பு!!
தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பைு வழங்கியது. அதில், மக்கள் அதிகம் கூடும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை கண்காணித்து, தெரு நாய்கள் உள்ளே நுழையாதவாறு, வேலி அமைக்க வேண்டும் என்றும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நிவேதா பெத்துராஜ் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.