AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

த.வெ.க தலைமையில் புதிய கூட்டணி? நாளை நடக்கும் கூட்டத்திற்கு தோழமை கட்சி தலைவர்களுக்கு அழைப்பு..

தமிழக வெற்றி கழகம் சார்பில் நாளை ஆதரவு அளித்த தோழமை கட்சிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

த.வெ.க தலைமையில் புதிய கூட்டணி? நாளை நடக்கும் கூட்டத்திற்கு தோழமை கட்சி தலைவர்களுக்கு அழைப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jun 2026 07:40 AM IST

ஜூன் 30, 2026:  நாளை தமிழக வெற்றி கழகம் தலைமையில், தங்களுக்கு ஆதரவு அளித்த கட்சிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் இல்லாததால், பல்வேறு கட்சிகளின் ஆதரவை நாடியது.

த.வெ.க அரசுக்கு ஆதரவு தெரிவித்த தோழமை கட்சிகள்:

அதன்படி, தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்திற்கு 120 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. இதில், காங்கிரஸ் கட்சி முதலில் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, மே 10-ஆம் தேதி ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்ஆசராக பதவியேற்றார்.

முதல்வர் விஜய் தலைமையில் கூட்டம் – தலைவர்களுக்கு அழைப்பு:

இந்தச் சூழலில், தமிழக வெற்றி கழகம் சார்பில் நாளை ஆதரவு அளித்த தோழமை கட்சிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (ம.தி.மு.க.) பொதுச் செயலாளர் வைகோ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரையும் சந்தித்து கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

மேலும் படிக்க: நுகர்வோருக்கு பால் தடையின்றி வழங்கப்படும்.. வதந்திகளை நம்ப வேண்டாம் – ஆவின் நிர்வாகம் விளக்கம்..

த.வெ.க தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி?

தமிழக வெற்றி கழகம் தனது அரசியல் ஆதரவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாகக் கருதப்படுகிறது. இதில் பல்வேறு முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, புதிய அரசியல் அணியை உருவாக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணிக்கான பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் விரைவில் அழைப்பு விடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us