வால்பாறையில் பயங்கரம்… சிறுத்தை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு!

Coimbatore Leopard Attack : கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கிய 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். பால் வாங்க சென்றபோது, சிறுத்தை தாக்கியதில் சிறுவன் பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து, மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

வால்பாறையில் பயங்கரம்... சிறுத்தை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு!

சிறுத்தை தாக்கி உயிரிழப்பு

Updated On: 

12 Aug 2025 09:45 AM

கோவை, ஆகஸ்ட் 12 : கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சிறுவனை தாக்கி கொன்ற சிறுத்தையை கூண்டு அமைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர் அலி. அவருடைய மனைவி ரோகமாலா. இவர்கள் இருவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் தோட்ட வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில்  படித்து வந்தார். இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 11ஆம் தேதியான நேற்று மாலை 6.30 மணியளவில் 8 வயது சிறுவன் நூர்சல் ஹக் தனது வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு பால் வாங்க சென்றிருக்கிறார். அப்போது, அந்த வீட்டில் பால் வாங்கிவிட்டு திரும்பி சென்றிருக்கிறார்.

சிறுத்தை தாக்கி 8 வயது சிறுவன் பலி

அப்போது, திடீரென வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை, சிறுவனை தாக்கி இருக்கிறது. இதில், சிறுவனக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் 8 வயது சிறுவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வால்பாறை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், சிறுவனை தாக்கி கொன்ற சிறுத்தையை கூண்டு அமைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஜூடோ பயிற்சியாளர் குற்றவாளி என தீர்ப்பு

வால்பாறை பகுதி அடர்ந்த காடுகளை நிறைந்த பகுதி என்பதால், அங்கிருக்கும் வனவிலங்குகள் மக்களுக்கு வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்து அவர்களை தாக்கி வருகிறது. குறிப்பாக, அண்மைக் காலங்களில் சிறுத்தை தாக்குதல்கள் அப்பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இதனால், வால்பாறை பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

வனத்துறை நடவடிக்கை

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, சிறுத்தை தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினரும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், மக்கள் காடுகள் சூழ்ந்த பகுதிக்குள் தனியாக செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Also Read : சிறுநீரகம் திருடப்பட்டதை உறுதி செய்த விசாரணை குழு.. பரிந்துரைகள் என்னென்ன?

இந்த சூழலில், 8 வயது சிறுவனை சிறுவன் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். எனவே, சிறுத்தையை பிடிக்க, வலைகள், கேமரா அமைத்து தேடி வருகின்றனர்சமீபத்தில் கூட, தென்காசி மாவட்டத்தில் கரடி தாக்கி 3 பேர் படுகாயம் அடைந்தனர். . விவசாய நிலத்திற்குச் சென்ற மூன்று பெண்களை காட்டுப்பகுதியில் இருந்த கரடி வந்து அவர்களை தாக்கி தாக்கியதில் அவர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.