திருப்பூரில் அதிரடியாக களமிறங்கிய டெல்லி போலீசார்.. 6 பேர் சுற்றி வளைத்து கைது.. பயங்கரவாத சதிச்செயலா?

Bangladeshis Arrested: செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதாக 6 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை டெல்ல போலீசார் திருப்பூரில் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் அதிரடியாக களமிறங்கிய டெல்லி போலீசார்.. 6 பேர் சுற்றி வளைத்து கைது.. பயங்கரவாத சதிச்செயலா?

திருப்பூரில் 6 வங்கதேசத்தினர் அதிரடி கைது

Published: 

21 Feb 2026 13:50 PM

 IST

புதுடெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்து பதிவிட்டதாக புகார் எழுந்தது. அதன் பேரில், டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த சிலர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து விட்டது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருப்பூர் மாவட்டத்தில் 3 இடங்களில் இருந்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது தெரிய வந்தது. அதன்பேரில், டெல்லி போலீசார் திருப்பூர் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை ( பிப்ரவரி 21) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஊத்துக்குளி பகுதியில் இருந்து 2 பேரும், பல்லடம் பகுதியில் இருந்து 3 பேரும், திருமுருகன்பூண்டி பகுதியில் இருந்து ஒருவரும் என 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பயங்கரவாதிகளுக்கு உளவு பார்ப்பு

இதைத் தொடர்ந்து, அவர்களை அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் 6 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், உரிய பாஸ்போர்ட் இன்றி இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து தங்கி இருந்ததும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டதும், தமிழகத்தில் உளவு பார்த்து தகவல் தெரிவிப்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க: சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கிய இரு சிறுமிகள்.. கண்ணில் தெரிந்த அசைவு.. அடுத்து நேர்ந்த துயரம்!

செங்கோட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக

மேலும், அவர்களிடம் செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதாக கூறி வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா டெல்லியில் செங்கோட்டை அருகேயும், நாடு முழுவதும் உள்ள முக்கிய மத வழிபாட்டு தளங்களிலும் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி வெடிகுண்டு மிரட்டலுடன் தொடர்பா

இதில், குறிப்பாக சாந்தினி சௌக்கில் உள்ள ஒரு கோவிலுக்கும் பயங்கரவாதிகள் இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், டெல்லி முழுவதும் பாதுகாப்பு படையின் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக 6 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில், ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: டெல்லி செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் திட்டம்: வெளியான அதிர்ச்சி தகவல்

Related Stories
“பணப்பெட்டியை வாங்கிக் கொண்டு திமுகவுடன் கூட்டணி”.. ஓபிஎஸ் மீது மரியாதை உள்ளது.. நயினார் நாகேந்திரன்
காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள்.. திமுக ஒதுக்க இருக்கும் தொகுதிகள்.. முழு விவரம் இதோ!
“விசிக நினைத்தால் அதிமுக அல்லது தவெகவுடன் கூட்டணி அமைக்க முடியும்”.. திருமாவளவன் பரபர பேச்சு..
மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் கட்டணம்… ரயில்வே வெளியிட்ட திடீர் அறிவிப்பு… சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!
27 கொண்டை ஊசி வளைவுகள்.. யானைகள்-புலிகள் நிறைந்த சுற்றுலா தலம்.. திகிலூட்டும் அனுபவத்துக்கு இங்க போங்க!
அமைச்சர் கே.என்.நேரு மீதான முறைகேடு புகார்… 5 ஐஏஎஸ்- 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தொடர்பா? ED அறிக்கை!
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!