ரூ.3 லட்சத்திற்கு பச்சிளம் குழந்தையை வாங்கிச் சென்ற 3 பெண்கள்!
3 Women Bought 45 Days Old Child | காரைக்குடியில் பிறந்து 45 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை 3 பெண்கள் ரூ.3 லட்சத்திற்கு வாங்கிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரைக்குடி, ஜூலை 13 : காரைக்குடியில் (Karaikudi) வறுமையை பயன்படுத்தி பிறந்து வெறும் 45 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மூன்று பெண்கள் ரூ.3 லட்சத்துக்கு வாங்கிச் சென்ற நிலையில், போலீசார் அந்த குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தையின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார், அந்த குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பச்சிளம் குழந்தை ரூ.3 லட்சத்திற்கு வாங்கப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
45 நாட்களாக பச்சிளம் குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு வாங்கிய பெண்கள்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மெமெ வீதியை சேர்ந்தவர் பழனிகுமார். இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், லட்சுமி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் மே 21, 2026 அன்று அவருக்கு நான்கவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதையும் படிங்க : மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. 73000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி.. அதிரடியாக தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
இந்த நிலையில், மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் லட்சுமியிடம் வறுமையில் இருக்கும் உங்களால் 4 பெண் குழந்தைகளையும் வளர்க்க முடியாது. எனவே இந்த பெண் குழந்தையை விற்றுவிடலாம் என கூறியுள்ளார். ஆனால், அதற்கு லட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த தம்பதி லட்சுமியிடம் குழந்தையை கேட்டுள்ளார். அப்போதும் அவர் குழந்தையை தர மறுத்துள்ளார்.
பணம் கொடுத்துவிட்டு குழந்தையை எடுத்துச் சென்ற பெண்கள்
இந்த நிலையில், ஜூலை 12, 2026 அன்று லட்சுமியும் அவரது மூத்த மகளும் வீட்டில் இருந்தபோது சென்னை தம்பதி அனுப்பியதாக மூன்று பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் ரூ.3 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், லட்சுமிக்கு குழந்தையை கொடுக்க மனமில்லாததால்
இதையும் படிங்க : நெல்லை- தென்காசியில் நாளை மின் நிறுத்தம்… எங்கெங்கு தெரியுமா.. நோட் பண்ணுங்க மக்களே!
இதனால், அவர் டிஎஸ்பி ஆஷிஷ்புனியாவிடம் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.