“மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது கோடைக்காலம்”.. இந்த ஆண்டு கொளுத்தப்போகுது வெயில்..
2026 Summer to start: தென் மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்கக் கூடிய ஜூன் மாதத்தில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், அதே மாதத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதை உணர முடியும். இந்த வெப்பம் செப்டம்பர் இறுதி வரையிலோ அல்லது அக்டோபர் 2-வது வாரம் வரையிலோ நீடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

மாதிரிப் படம் (AI)
சென்னை, பிப்ரவரி 25: இந்த ஆண்டு மார்ச் முதல் வாரம் கோடைகாலம் தொடங்குவதாகவும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அடுத்து நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம், மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ளது. அதுவும் அக்டோபர் மாதம் வரை வெப்பம் நீடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறிய விவரங்கள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: ஒரு பக்கம் வெயில்.. ஒரு பக்கம் மழை.. வரக்கூடிய நாட்களில் வானிலை எப்படி இருக்கும்?
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்:
|டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் கோடைக்கால சிறப்பு வானிலை அறிக்கை| தேதி: 24.02.2026
வானிலை அமைப்பு:
1. எல் நினோ (EL-NINO) அமைப்பு இந்தாண்டு அகட்டோபரில் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2. மார்ச் முதல் மே மாதம் வரை பசிபிக் பெருங்கடல் வெப்பநிலை சமநிலையிலும் (Neutral), ஜூன்… pic.twitter.com/xxbiUd7Wjx
— Delta Weatherman (Hemachander R) (@Deltarains) February 24, 2026
இந்த ஆண்டு கோடை காலம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்படி, மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் 12 வாரங்களில் 4 முதல் 6 வாரங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், வறண்ட வானிலை கொண்டதாகவும் இருக்கும். 2 வாரங்கள் வெப்பசலன இடிமழையும், 3 முதல் 4 வாரங்கள் இயல்பான வெப்பநிலையும் காணப்படும். இதில் வெப்பசலன மழை மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும்.
அக்டோபர் வரை நீடிக்கும் வெப்பம்:
தென் மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்கக் கூடிய ஜூன் மாதத்தில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், அதே மாதத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதை உணர முடியும். இந்த வெப்பம் செப்டம்பர் இறுதி வரையிலோ அல்லது அக்டோபர் 2-வது வாரம் வரையிலோ நீடிக்க அதிக வாய்ப்புள்ளது. இது மழைப்பொழிவை குறைவாக தரக்கூடிய ‘எல்நினோ’ என்ற அமைப்பினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகும். 2020, 2021, 2022, 2024, 2025 ஆகிய ஆண்டுகள் மழை தரக்கூடிய ‘லாநினோ’ ஆண்டுகளாக இருந்தன.
இதையும் படிக்க: ஆட்சிக்கு வந்தால்.. “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000”.. அதிமுகவின் அதிரடி வாக்குறுதிகள் இதோ!!
வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும்:
2027-ம் ஆண்டு உலகளாவிய எல்நினோ ஆண்டாக இருக்கும் என்பதால், உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும். அதிலும் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2027) மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். மொத்தத்தில் 2026-ம் ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் ஆண்டாகவும், 2027-ம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவும் காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.