Year Ender 2025: 3 கேப்டன்கள்.. 3 தோல்விகள் மட்டுமே! 2025ல் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எப்படி?
Indian Team ODI Performance in 2025: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் (2025 Champions Trophy) கோப்பையை வென்றது. தற்போது இந்திய மண்ணில் நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை முடித்தது.

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்கள்
2025ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு (Indian Cricket Team) சிறப்பானதாக அமைந்தது என்றே சொல்லலாம். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் (2025 Champions Trophy) கோப்பையை வென்றது. தற்போது இந்திய மண்ணில் நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடரில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை முடித்தது. 2025ம் ஆண்டில் இந்திய ஒருநாள் அணியை 3 கேப்டன்கள் வழிநடத்தியுள்ளனர். அதேநேரத்தில், இந்திய அணி மொத்தம் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. 2025ம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், 2025ம் ஆண்டில் இந்திய அணியின் ஒருநாள் செயல்திறன் எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: மீண்டும் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா.. விளையாட ஆர்வம் காட்டும் ஹிட் மேன்!
11 போட்டிகளில் வென்ற இந்திய அணி:
2025ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்தது. இதுமட்டுமின்றி, ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி, 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. இருப்பினும், யார் எதிர்பார்க்காத வகையில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக இந்தியாவின் புதிய ஒருநாள் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் தோல்வி:
கில்லின் தலைமையின் கீழ், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது சுப்மன் கில் காயமடைந்தார். இதன் விளைவாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டார். ராகுலின் தலைமையின் கீழ், இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
ALSO READ: டி20யில் களமிறங்கும் சுப்மன் கில்.. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!
2025ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் செயல்திறன்:
- 2025 பிப்ரவரி 6: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2025 பிப்ரவரி 9: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2025 பிப்ரவரி 12: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2025 பிப்ரவரி 20: வங்கதேசம் எதிராக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2025 பிப்ரவரி 23: பாகிஸ்தான் எதிராக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2025 மார்ச் 2: நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2025 மார்ச் 4: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2025 மார்ச் 9: நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2025 அக்டோபர் 19: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
- 2025 அக்டோபர் 23: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
- 2025 அக்டோபர் 25: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2025 நவம்பர் 30: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2025 டிசம்பர் 3: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
- 2025 டிசம்பர் 6: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.