WPL 2026 Final: சாம்பியன் பட்டம் யாருக்கு? களத்தில் பெங்களூரு – டெல்லி.. ஹெட் டூ ஹெட் விவரம்!
WPL 2026 Final DC vs RCB: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான பைனல் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், டெல்லி கேபிடல்ஸ் 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
மகளிர் பிரீமியர் லீக் 2026ன் (WPL 2026) இறுதிப்போட்டி இன்று அதாவது 2026 பிப்ரவரி 5ம் தேதி வதோதராவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத இருக்கிறது. பெங்களூரு அணிக்கு ஸ்மிருதி மந்தனாவும், டெல்லி அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸூம் தலைமை தாங்குகின்றனர். அந்தவகையில், டெல்லி கேபிடல்ஸ் முதல் முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2வது முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கும்.
வதோதராவில் இரு அணிகளின் சாதனையும் எப்படி..?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையிலான பைனல் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், டெல்லி கேபிடல்ஸ் 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது. WPL 2026ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வதோதராவில் 4 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றியும் 2ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. நடப்பு 2026 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி இங்கு 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது.
ALSO READ: 2வது பட்டத்தை நோக்கி பெங்களூரு.. முதல் கோப்பையை அடைய துடிக்கும் டெல்லி.. பைனல் எப்போது?
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
The stage is set for an epic finale! 🏆
Will it be ‘4th time lucky’ for the #DC or will #RCB clinch their 2nd title? 🏏#TATAWPL 👉🏻 FINAL | #RCBvDC | THU, 5th FEB, 6 PM pic.twitter.com/BsTevCho54
— Star Sports (@StarSportsIndia) February 5, 2026
மகளிர் பிரீமியர் லீக் 2026 இறுதிப் போட்டிக்கு முன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் ஒருவருக்கொருவர் எதிராக 9 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், பெங்களூரு அணியை விட டெல்லி கேபிடல்ஸ் சற்று முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 9 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் 6 போட்டிகளிலும், பெங்களூரு 3 போட்டிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு 2026 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 வெற்றிகளை இலக்குகளைத் துரத்தும் போது பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுபுறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த சீசனில் 4 வெற்றிகளை துரத்தும் போதும், 4 வெற்றிகளை டிஃபென்டிங் செய்யும் போதும் பெற்றுள்ளது.
ALSO READ: மகளிர் பிரீமியர் லீக்கில் நுழையும் சிஎஸ்கே.. குஷியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!
WPL 2026 இறுதிப் போட்டி: இரு அணிகளின் முழு விவரம்:
டெல்லி கேபிடல்ஸ்:
லிசெல் லீ (விக்கெட் கீப்பர்), ஷஃபாலி வர்மா, லாரா வோல்வார்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (கேப்டன்), மரிசானே கப், சினெல்லே ஹென்றி, நிகி பிரசாத், ஸ்னேஹ் ராணா, மின்னு பானியா, தனமானி, ஸ்ரீ சரண்மானி, அல் நன்த்ரீ சரண்மானி லூசி ஹாமில்டன், பிரகதி சிங், எடலா ஸ்ருஜனா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
கிரேஸ் ஹாரிஸ், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஜார்ஜியா வோல், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ராதா யாதவ், நாடின் டி கிளர்க், பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, சயாலி சத்கரே, ஸ்ரேயங்கா பாட்டீல், லாரன் பெல், லின்சே நஹேமலா, லின்சே நஹேமலாக், லின்சே நஹேமலாக் ஸ்மித். பிரேமா ராவத்.