Gautam Gambhir: கண்டு கொள்ளாத கோலி.. ரோஹித்துடன் விவாதம்.. கம்பீருக்கு எதிராக திரும்பும் இந்திய அணி..?
Indian Cricket Team: ராஞ்சி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி ஹோட்டலுக்கு வந்தபோது, மொத்த அணியினரும் கேக் வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது விராட் கோலி நேராக தனது அறைக்குச் சென்றார். இதனை தொடர்ந்து, கவுதம் கம்பீர் ரோஹித் சர்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார்.

இந்திய அணி
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு, இந்திய அணிக்குள் மிகவும் பதட்டமான சூழ்நிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான (Virat Kohli) விராட் கோலி, ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே பேச்சு வார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு அனுபவ வீரர்களும் தலைமை பயிற்சியாளரின் மீது கோபமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. இது இந்திய அணிக்குள் ஒரு விசித்திரமான சூழ்நிலையை உருவாக்குகிறது. ரோஹித், விராட் மற்றும் கம்பீர் இடையேயான வாக்குவாதம் பயிற்சி காரணமாக தொடங்கியதாகக் கூட கூறப்படுகிறது.
ALSO READ: ராஞ்சியில் அதிரடி சதம்! டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் களமா? விராட் கோலி விளக்கம்!
ராஞ்சியில் ரோஹித்-விராட் மற்றும் கம்பீர் இடையே என்ன நடந்தது ?
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ராஞ்சிக்கு சீக்கிரமாக வந்து தனித்தனியாக பயிற்சி செய்துள்ளர் என்று கூறப்படுகிறது. இதை அறிந்த கவுதம் கம்பீர் , “இருவரையும் என்னிடம் வந்து பேசச் சொல்லுங்கள்” என்றார். இதனால், ரோஹித்தும், கோலியும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து,ராஞ்சி ஒருநாள் போட்டியில் ரோஹித்தும் விராட்டும் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடியபோது, கவுதம் கம்பீரின் சில வீடியோக்களும் வைரலானது, இதனால் மூவருக்கும் இடையே ஏதோ சரியில்லை என்ற கூற்றுக்கள் எழுந்தன. போட்டிக்குப் பிறகும், ரோஹித்தும் கவுதம் கம்பீரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
ஹோட்டலில் நீண்ட நேரம் உரையாடிய ரோஹித் – கம்பீர்:
Head Coach Gautam Gambhir and Rohit Sharma were seen in discussion after the first ODI in Ranchi! 👀
Any guesses what they were talking about? 🤔#INDvSA #RohitSharma #GautamGambhir pic.twitter.com/KyvxJihwxl
— Sportskeeda (@Sportskeeda) November 30, 2025
ராஞ்சி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி ஹோட்டலுக்கு வந்தபோது, மொத்த அணியினரும் கேக் வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது விராட் கோலி நேராக தனது அறைக்குச் சென்றார். இதனை தொடர்ந்து, கவுதம் கம்பீர் ரோஹித் சர்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். ரோஹித் சர்மா மிகவும் தீவிரமான மனநிலையில் இருப்பதாகத் தோன்றியது. அப்போது, அங்கிருந்தவர்கள் இருவருக்கும் இடையே எல்லாம் சரியாக இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலைமை தொடர்ந்தால், அது இந்திய அணியின் மற்ற வீரர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும் ராஞ்சியில் இருந்து இந்திய அணி தற்போது ராய்ப்பூருக்கு வந்துள்ளது. இந்த போட்டிவருகின்ற 2025 டிசம்பர் 3ம் தேதி நடைபெறும்.
ALSO READ: ஒருநாள் வரலாற்றில் முதல் முறை.. ரன்களை வாரிவழங்கிய இந்திய பவுலர்கள்.. கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!
இந்திய அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ரோஹித் மற்றும் விராட்டின் சிறந்த இன்னிங்ஸால் இந்திய அணி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 57 ரன்களும், கோலி 7 சிக்ஸர்களுடன் 135 ரன்களும் எடுத்தனர். இதுமட்டுமின்றி கேப்டன் கே.எல். ராகுலும் 60 ரன்களை எடுத்தார்.