Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Virat Kohli’s Wimbledon Appearance: விம்பிள்டனில் கோலி-அனுஷ்கா.. ஜோகோவிச்சின் வெற்றியை கண்டு ரசித்த பிரபல ஜோடி..!

Virat Kohli and Anushka Sharma at Wimbledon: விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், மனைவி அனுஷ்கா சர்மாவுடன் லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காணச் சென்றார். நோவக் ஜோகோவிச்சின் போட்டியை ரசித்த அவர்கள், ஜோகோவிச்சின் வெற்றியைப் புகழ்ந்து பேசினர். இது இணையத்தில் வைரலாகியுள்ளது. கோலியின் ஓய்வு அறிவிப்பு, அவரது விம்பிள்டன் வருகை என இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Virat Kohli’s Wimbledon Appearance: விம்பிள்டனில் கோலி-அனுஷ்கா.. ஜோகோவிச்சின் வெற்றியை கண்டு ரசித்த பிரபல ஜோடி..!
விராட் கோலி - அனுஷ்கா சர்மாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jul 2025 14:38 PM

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி (Virat Kohli) தனது குடும்பத்துடன் நீண்ட காலமான லண்டனில் வீடு வாங்கி வசித்து வருகிறார். வெளிநாட்டு தொடர் என்றால் லண்டனில் இருந்து தொடர்களில் பங்கேற்கும் கோலி, இந்திய அணியின் உள்நாட்டு தொடர்களில் தனது சொந்த ஊரான டெல்லிக்கு திரும்பி போட்டிகளில் பங்கேற்கிறார். அதன்படி, விராட் கோலி இப்போது இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்துவிட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கோலி, கடைசியாக ஐபிஎல் 2025 இல் விளையாடினார். இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்படியான சூழ்நிலையில், விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா (Anushka Sharma) நேற்று அதாவது 2025 ஜூலை 7ம் தேதி விம்பிள்டனில் நோவக் ஜோகோவிச்சின் போட்டியை காண வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விம்பிள்டனை ரசித்த கோலி – அனுஷ்கா சர்மா:

எந்த விளையாட்டிலும் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு நேரம் வரும் என்று கூறப்படுகிறது. டென்னிஸில் தற்போதைய சகாப்தம் செர்பிய சூப்பர் ஸ்டார் நோவக் ஜோகோவிச்சின் சகாப்தம், அவர் தனது 25வது கிராண்ட்ஸ்லாம் வெல்ல 2025 விம்பிள்டன் மைதானத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தநிலையில், டென்னிஸ் நட்சத்திரம் ஜோகோவிச் போட்டியை காண விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் விம்பிள்டனின் செண்டர் ஸ்டேடியத்தை அடைந்தார். நோவக்கைப் புகழ்ந்து விராட் கோலி தனது ஸ்டோரி பக்கத்தில் ஒரு ஸ்டோரியையும் பகிர்ந்து கொண்டார்.

ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நோவக் ஜோகோவிச் தனது எதிராக சிறப்பான வெற்றியை பதிவு செய்தார். விம்பிள்டன் போட்டியில், 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஜோகோவிச் முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் இழந்தார். ஆனால், அடுத்த மூன்று செட்களையும் 6-4, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று அற்புதமாக செயல்பட்டு வெற்றியை பதிவு செய்தார். இதன்மூலம், விம்பிள்டனின் நான்காவது சுற்றில் அலெக்ஸ் டி மினாரை தோற்கடித்து நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்இப்போது ஜோகோவிச் காலிறுதியில் ஃபிளாவியோ கோபோலியை எதிர்கொள்வார். இது விம்பிள்டன் போட்டியில் நோவக் ஜோகோவிச்சின் 101வது வெற்றியாகும்.

டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு 2025 மே 12ம் தேதி டெஸ்ட் வடிவத்திலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். டெஸ்ட் போட்டிகளில் நீண்ட காலமாக பார்ம் அவுட்டுடன் தவித்து வந்த கோலி, ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்தது. முன்னதாக, 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, அவர் டி20 போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். இப்போது விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதன்படி, விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் எப்போது விளையாடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.