Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sourav Ganguly Birthday: கொல்கத்தாவின் இளவரசர்.. சவுரங் கங்குலி கிரிக்கெட் சாம்ராஜ்யம் உருவான வரலாறு!

Sourav Ganguly's Legacy: இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 53வது பிறந்தநாள் ஜூலை 8, 2025 அன்று கொண்டாடப்படுகிறது. கொல்கத்தாவின் இளவரசர் என அழைக்கப்படும் இவர், யுவராஜ் சிங், தோனி போன்ற வீரர்களை அறிமுகப்படுத்தினார். 2000 களில் இந்திய அணியை புதிய உயரத்துக்கு கொண்டு சென்ற கங்குலி, 113 டெஸ்ட், 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தார்.

Sourav Ganguly Birthday: கொல்கத்தாவின் இளவரசர்.. சவுரங் கங்குலி கிரிக்கெட் சாம்ராஜ்யம் உருவான வரலாறு!
சவுரவ் கங்குலிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 08 Jul 2025 17:00 PM

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களின் ஒருவரான சவுரவ் கங்குலியின் (Sourav Ganguly) பிறந்தநாள் இன்று அதாவது 2025 ஜூலை 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, சவுரவ் கங்குலி தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கங்குலியை தாதா என்று பெரும்பாலானோர் அழைத்தாலும் ‘கொல்கத்தாவின் இளவரசர்’, ஆஃப் சைடின் கடவுள், பெங்கால் புலி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டார். இந்திய அணி (Indian Cricket Team) கட்டமைத்து பல முக்கிய வீரர்களை கண்டறிந்த பெருமை கங்குலிக்கு உண்டு. யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், எம்.எஸ்.தோனி போன்ற பல முக்கிய வீரர்களை இந்திய அணிக்காக அறிமுகப்படுத்தினார்.

சவுரங் கங்குலி:

மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவின் பெஹாலாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் கடந்த 1972ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி சவுரங் கங்குலி பிறந்தார். அவரது தந்தை பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். கிரிக்கெட்டை விட கால்பந்து சவுரங் கங்குலி பிடித்திருந்தது. அதன்படி, தனது 10ம் வகுப்பு வரை கால்பந்து விளையாடிய சவுரவ் கங்குலி, அதன்பிறகு கிரிக்கெட் பக்கம் தனது வாழ்க்கையை திருப்பினார். சவுரவ் கங்குலி 1989 ஆம் ஆண்டு ரஞ்சிப் போட்டியில் அறிமுகமானார். ரஞ்சியில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 1992 ஜனவரி 11 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஒரே ஒரு போட்டிக்குப் பிறகு சவுரவ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது, கங்குலி திமிர்பிடித்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், பின்னர் இந்தக் குற்றச்சாட்டு தவறு என்று நிரூபிக்கப்பட்டது. அதன்பிறகு, கங்குலியின் ரன் வேட்டை தொடர்ந்தது.

புதிய இந்திய அணிக்கு அடித்தளம்:

கடந்த 2000ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி சூதாட்டத்தில் சிக்கியது. அப்போது, இந்திய அணியின் எதிர்காலம் இருளில் மூழ்கியது. இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்க சச்சின் டெண்டுல்கர் மறுத்த நிலையில், சவுரவ் கங்குலி முன்னேறி அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தாதாவின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய அத்தியாயம் தொடங்கியது. எதிரணி அணிகளை அவர்களின் சொந்த மைதானத்தில் தோற்கடித்து இந்திய அணி தனது பெயரை பிரபலப்படுத்தியது. கங்குலி இந்திய அணிக்கு பக்கபலமாக இருக்க, இதன் காரணமாக இந்திய அணி பயமின்றி விளையாடத் தொடங்கியது.

கங்குலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:

சவுரவ் கங்குலி இந்திய அணிக்காக இதுவரை 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 113 டெஸ்ட் போட்டிகளில் கங்குலி 16 சதங்கள் மற்றும் 35 அரைசதங்களுடன் 7,212 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் கங்குலி 22 சதங்கள் மற்றும் 72 அரைசதங்களுடன் 11363 ரன்கள் எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி, கங்குலி ஒரு பந்துவீச்சாளராக சர்வதேச கிரிக்கெட்டில் 132 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சவுரவ் கங்குலி இந்திய அணிக்காக 49 டெஸ்ட் போட்டிகளிலும், 147 ஒருநாள் போட்டிகளிலும் தலைமை தாங்கியுள்ளார். கங்குலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இறுதிப்போட்டியை எட்டியது. மேலும், 2002 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கூட்டு வெற்றியாளராக இருந்தது. 2019-22 ஆம் ஆண்டு காலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராகவும் இருந்தார்.