Vaibhav Sooryavanshi: பைனலுக்கு முன் வந்த மெசேஜ்.. பறக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி.. யார் கொடுத்த அட்வைஸ் அது?

Sachin, Kohli Wishes: அண்டர் 19 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பைனலில் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் குவித்தார். இதையடுத்து, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இந்திய அண்டர் 19 அணியை பாராட்டியுள்ளனர்.

Vaibhav Sooryavanshi: பைனலுக்கு முன் வந்த மெசேஜ்.. பறக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி.. யார் கொடுத்த அட்வைஸ் அது?

விராட் கோலி - வைபவ் சூர்யவன்ஷி - சச்சின் டெண்டுல்கர்

Published: 

07 Feb 2026 14:56 PM

 IST

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை (Under 19 World Cup 2026) இறுதிப்போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்து அணியும் நேற்று அதாவது 2026 பிப்ரவரி 6ம் தேதி மோதியது. இந்த போட்டியில் ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 6வது முறையாக சாம்பியன் ஆனது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் (Vaibhav Sooryavanshi) அதிரடியான 175 ரன்களே காரணம். இந்தநிலையில், அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பு வைபவ் சூர்யவன்ஷியின் தொலைபேசிக்கு ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் வந்ததாகவும், சூர்யவன்ஷி வாழ்க்கையில் மறக்கமுடியாத இன்னிங்ஸூக்கு அடித்தளமாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த மெசேஜை அனுப்பியது வைபவ் சூர்யவன்ஷியின் குழந்தை பருவ பயிற்சியாளர் மனிஷ் ஓஜா.

ALSO READ: அண்டர் 19 உலகக் கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம்.. 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி!

என்ன சொன்னார் மனிஷ் ஓஜா..?

முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 68 ரன்கள் எடுத்தபோது, பயிற்சியாளர் மனிஷ் ஓஜா, வைபவ் சூர்யவன்ஷிக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினார். அதில். “ அண்டர் 19 உலகக் கோப்பையில் நீ இன்னும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அப்படி நீ சதம் அடிக்கவில்லை என்றால் நீ சதம் அடிக்காத முதல் போட்டியாக இருக்கும். எனவே, நீ இறுதிப் போட்டியில் செட் ஆனாலும், வெளியேறாமல் ரன் குவிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்த வார்த்தைகள் வைபவ் சூர்யவன்ஷியின் மனதில் நன்றாக பதிந்து மிகப்பெரிய இன்னிங்ஸை கொடுத்தார்.

வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய சச்சின், கோலி:


அண்டர் 19 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பைனலில் வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் குவித்தார். இதையடுத்து, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இந்திய அண்டர் 19 அணியை பாராட்டியுள்ளனர்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “சாம்பியன்ஸ்! இந்த இளம் அணியையும் அவர்களின் அச்சமற்ற ஆட்டத்தையும் நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உட்பட இந்திய அண்டர் 19 அணிக்கும் வாழ்த்துக்கள். இந்த தருணத்தை அனுபவியுங்கள். உங்களுக்கு சூரியவன்ஷி இருக்கும்போது, ​​நீங்கள் ஒரு காலத்தால் அழியாத பிளாக்பஸ்டரை எதிர்பார்க்கிறீர்கள். சபாஷ், வைபவ்!” என தெரிவித்திருந்தார்.

ALSO READ: இறுதிப்போட்டியில் இறங்கி குத்திய சூர்யவன்ஷி.. 55 பந்துகளில் சதம் அடித்து சம்பவம்!

2008 ஆம் ஆண்டு U19 உலகக் கோப்பையில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற ரன் மெஷின் விராட் கோலியும் இந்திய அணியைப் பாராட்டி, “உலகக் கோப்பையை மீண்டும் வென்ற இந்திய 19 வயதுக்குட்பட்ட அணிக்கு வாழ்த்துக்கள். வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டிலும் அதற்கு அப்பாலும் எங்கள் ஆதிக்கம் தொடர்கிறது. முழு இந்திய அண்டர் அணிக்கும் துணை ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்தார்.

சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்