BCCI elections 2025: அடுத்த பிசிசிஐ தலைவர் யார்..? விரைவில் தேர்தல்! ராஜீவ் சுக்லா போட்டியா?
Upcoming BCCI Elections: பிசிசிஐயில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் தலைவர் மற்றும் ஐபிஎல் தலைவர் பதவிகள் முக்கிய கவனத்தை ஈர்க்கின்றன. ரோஜர் பின்னியின் ஓய்வுக்குப் பின், ராஜீவ் சுக்லா தற்காலிகத் தலைவராக உள்ளார். அருண் துமாலின் 6 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதால், அவர் 3 ஆண்டு கூலிங்-ஆஃப் காலத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (BCCI) விரைவில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் இந்த பதவி தற்போது காலியாக உள்ளது. இதையடுத்து, ராஜீவ் சுக்லா (Rajeev Shukla) தற்போது பிசிசிஐயின் தற்காலிகத் தலைவராக உள்ளார். மேலும், ஐபிஎல் தலைவர் அருண் துமால் பதவி காலம் முடிவடையவுள்ளது. அதாவது, தற்போதையை ஐபிஎல் தலைவர் அருண் துமால் (Arun Dhumal) வருகின்ற 2025 அக்டோபர் மாதத்துடன் பிசிசிஐயின் பல்வேறு பதவிகளில் 6 ஆண்டுகள் பணியாற்றி முடிப்பார். இதன் பிறகு அவரது மூன்று ஆண்டு கூலிங்-ஆஃப் காலம் தொடங்கும். அதன் கீழ் அருண் துமல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பிசிசிஐயில் எந்தவொரு பதவியிலும் இருக்க முடியாது.
பிசிசிஐ தேர்தல்களில் பல பெரிய கேள்விகள்:
பிசிசிஐயில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்பே பல கேள்விகள் எழுந்துள்ளன. பிசிசிஐ தலைவர் மற்றும் ஐபிஎல் தலைவர் பதவிகளை யார் வகிப்பார்கள் என்பது உட்பட, தேர்தலுக்குப் பிறகுதான் இது குறித்து தெரியவரும்.




ALSO READ: உடற்தகுதி தேர்வில் விராட் கோலிக்கு விலக்கா..? மீண்டும் இந்திய அணியில் விஐபி சலுகையா?
ராஜீவ் சுக்லா பிசிசிஐ தலைவராக வர வாய்ப்பா..?
🚨 THE NEW BCCI PRESIDENT 🚨
Rajeev Shukla is a serious contender for the new BCCI President post due to his experience. [Gaurav Gupta from TOI] pic.twitter.com/qOuUW5qLit
— Johns. (@CricCrazyJohns) September 2, 2025
ராஜீவ் சுக்லா பிசிசிஐ தலைவராக வருவாரா என்பது மிகப்பெரிய கேள்வி. ராஜீவ் சுக்லா பல துணைக் குழுக்கள், குழுக்கள், ஐபிஎல் தலைவர் மற்றும் இந்திய அணி மேலாளர் போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ளார். இதனால், நீண்டகாலமாக பிசிசிஐயில் ஏதேனும் ஒரு பதவியில் இருந்து வருகிறார். ராஜீவ் சுக்லா கடந்த 2020ம் ஆண்டு முதல் பிசிசிஐயின் துணைத் தலைவராக இருந்து வருகிறார். அதன்படி, ராஜீவ் சுக்லா பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரது பதவிக்காலம் டிசம்பர் 2026ம் ஆண்டு வரை மட்டுமே நீடிக்கும்.
2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பிசிசிஐயில் எந்தவொரு அதிகாரியும் எந்தவொரு பதவியிலும் 6 ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க வேண்டும். இதில், பிசிசிஐயில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நான்கு அலுவலகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். ராஜீவ் சுக்லா 4.5 ஆண்டுகளுக்கும் மேலாக துணைத் தலைவர் பதவியில் உள்ளார். அவர் தலைவராக வந்தால், டிசம்பர் 2026ம் இந்தப் பதவியில் இருந்து விலக வேண்டும்.
ALSO READ: இந்திய அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சர்ஷிப் எது..? ஏல திட்டத்தை வகுத்த பிசிசிஐ!
அருண் துமாலின் கூலிங்-ஆஃப் காலம்:
பிசிசிஐ தேர்தலில் இரண்டாவது கேள்வி, ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூலிங் ஆஃப் காலத்தை முடிக்க வேண்டுமா என்பதுதான். அருண் துமால் 2019ம் ஆண்டு பிசிசிஐ பொருளாளராக நியமிக்கப்பட்டார். 2022ம் ஆண்டு கூடுதலாக ஐபிஎல் தலைவராகப் பொறுப்பேற்றார். பிசிசிஐயில் துமால் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஆனால் 3 ஆண்டுகள் மட்டுமே அலுவலகப் பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, அருண் துமால் கூலிங் ஆஃப் காலத்தில் செல்ல வேண்டியிருந்தால், அனிருத் சவுத்ரி ஐபிஎல் தலைவராக நியமிக்கப்படலாம்.