U19 World Cup 2026 Final: அண்டர் 19 உலகக் கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம்.. 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி!

England U19 vs India U19 Final: ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அண்டர் 19 அணி, இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

U19 World Cup 2026 Final: அண்டர் 19 உலகக் கோப்பையில் தொடர்ந்து ஆதிக்கம்.. 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி!

இந்திய அண்டர் 19 அணி

Updated On: 

06 Feb 2026 21:08 PM

 IST

19 வயதுக்குட்பட்டோருக்கான (U19 World Cup 2026) ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 6ம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய அண்டர் 19 அணி, இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. வைபவ் சூர்யவன்ஷியின் (Vaibhav Sooryavanshi) 175 ரன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் அபார ஆட்டம் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதேநேரத்தில், 28 ஆண்டுகால பட்ட வறட்சியை முடிவுக்குக் கொண்டுவர இங்கிலாந்துக்கு வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், இந்திய அணியின் ஆக்ரோஷ ஆட்டத்தால் இங்கிலாந்து அணியால் தாக்கு பிடிக்கமுடியவில்லை.

ALSO READ: 311 ரன்களை எளிதாக எட்டிய இந்திய U19 அணி.. பைனலுக்கு முன்னேறி அசத்தல்..!

அசத்திய இந்திய அணி:

ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து 411 ரன்கள் எடுத்தது. இது 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எந்தவொரு அணியும் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் 175 ரன்கள் எடுத்தார். இதுமட்டுமின்றி, கேப்டன் ஆயுத் மத்ரேவும் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். இருப்பினும், இங்கிலாந்து அணியால் 311 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இருப்பினும், காலேப் பால்க்னர் இந்திய அணியின் பந்துவீச்சாளருக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து, 67 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து அற்புதமாக விளையாடினார். மறுமுனையில், அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

இந்தியா 6வது முறையாக சாம்பியன்:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை அதிக முறை வென்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. அதன்படி, இந்தியா தற்போது 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா இதற்கு முன்பு 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த வரலாற்று வெற்றிக்கு இந்தியாவை வழிநடத்திய ஆயுஷ் மத்ரேவின் பெயர் வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது.

ALSO READ: இறுதிப்போட்டியில் இறங்கி குத்திய சூர்யவன்ஷி.. 55 பந்துகளில் சதம் அடித்து சம்பவம்!

வெற்றி நாயகனாக வைபவ் சூர்யவன்ஷி:

இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிக்கு வைபவ் சூர்யவன்ஷி மிக முக்கிய காரணம். வெறும் 55 பந்துகளில் தனது சதத்தை எட்டியது மட்டுமின்றி 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்தார். இது 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு வீரரின் வேகமான சதமாகும்.

சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்
அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரனின் ஏகே 64 - தயாரிப்பாளர் இவரா?
இரு விமானங்களில் இறக்கைகள் உரசியதால் பரபரப்பு
4 கி.மீ கடலில் நீந்தி தனது குடும்பத்தைக் காப்பாற்றிய 13 வயது சிறுவன்