IND vs ENG Semi Final: சரவெடியாய் வெடித்த சஞ்சு சாம்சன்.. இங்கிலாந்து அணிக்கு 254 ரன்கள் இமாலய இலக்கு!

T20 World Cup 2026 Semi Final: 2026 டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 5ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இந்தியாவும், இங்கிலாந்து அணியும் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. 

IND vs ENG Semi Final: சரவெடியாய் வெடித்த சஞ்சு சாம்சன்.. இங்கிலாந்து அணிக்கு 254 ரன்கள் இமாலய இலக்கு!

சஞ்சு சாம்சன் - சிவம் துபே

Updated On: 

05 Mar 2026 21:08 PM

 IST

2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) 2வது அரையிறுதி போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 5ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இந்தியாவும், இங்கிலாந்து அணியும் (IND vs ENG) விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. முதலில், சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உதவியுடன் 89 ரன்கள் எடுக்க, அதைத் தொடர்ந்து சிவம் துபே 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி இமாலய இலக்கை தொட உதவியது.

ALSO READ: இங்கிலாந்து அணிக்கு எதிராக இது நடந்தால்.. இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்..!

அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்தியா:

டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளின் வரலாற்றில் அதிக ஸ்கோரை பதிவு செய்த அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது. முன்னதாக, 2012 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 205 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த சாதனையைப் படைத்திருந்தது. அதன்படி, உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டு அணிகள் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மட்டுமே. நாக் அவுட் போட்டிகளில் 250 ரன்களைக் கடந்த உலகின் முதல் அணியாகவும் இந்தியா மாறியுள்ளது.

விராட்டை சமன் செய்த சஞ்சு சாம்சன்:

இந்தப் போட்டியின் தொடக்கத்திலேயே அபிஷேக் சர்மாவும் ஆட்டமிழந்தார். ஆனால்,  சஞ்சு சாம்சன் இந்திய அணியின் ரன் ரேட் குறையாமல் பார்த்து கொண்டு 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உதவியுடன் 89 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக தனிநபர் ஸ்கோரைப் பதிவு செய்த விராட் கோலியின் சாதனையையும் சஞ்சு சாம்சன் சமன் செய்தார்.  2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனின் தொடர்ச்சியான இரண்டாவது அரைசதம் இதுவாகும்.

மூன்றாவது இடத்தில் உள்ளே வந்த சிவம் துபே 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதேநேரத்தில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6 பந்துகளில் 11 ரன்களும், இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்களும், ஹர்திக் மற்றும் திலக் முறையே 27 மற்றும் 21 ரன்கள் எடுத்தனர்.

ALSO READ: அரையிறுதியில் மீண்டும் ஒரு அசால்ட்.. சொற்ப ரன்களில் அபிஷேக் அவுட்!

19 சிக்ஸர்களும் 18 பவுண்டரிகளும்

இந்திய அணியின் இன்னிங்ஸில் 19 சிக்ஸர்களும் 18 பவுண்டரிகளும் இடம்பெற்றன. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகிய நான்கு பேட்ஸ்மேன்கள் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினர்.

Follow Us
வாட்ஸ்அப், டெலிகிராம் செயல்பாடுகளில் அதிரடி மாற்றம்.. இந்தியாவில் அமலுக்கு வந்தது..
துபாய், தோஹா, பஹ்ரைனில் ஈரான் தொடர் ஏவுகணைத் தாக்குதல்.. அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
ஐதராபாத் - ஈரான்.. பல நூற்றாண்டுகளைக் கடந்த கலாச்சார பந்தம்..
ஒவ்வொரு லைக்கிற்கும் ஒருமுறை ஸ்கிப்பிங் செய்வேன்... 1.8 மில்லியன் லைக்குகளை பெற்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி