2026 T20 World Cup: 2026 டி20 உலகக் கோப்பைக்கு கனடா தகுதி.. இதுவரை இந்திய உட்பட 13 அணிகள் களம்!
T20 World Cup Qualification: 2026 T20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் இணைந்து நடத்தப்படவுள்ளது. 13 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன, இதில் கனடாவின் இடம் குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இலங்கை தானாகத் தகுதி பெற்றிருக்க, 2024 T20 உலகக் கோப்பையின் டாப் 8 அணிகளும் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 7 இடங்கள் பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் நிரப்பப்படும்.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) குறித்தான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. சரியாக 8 மாதங்களுக்குப் பிறகு 2026 டி20 உலகக் கோப்பை போட்டியானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை போன்று, இந்த முறை நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையிலும் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இருப்பினும், இதுவரை மொத்தம் 13 அணிகள் மட்டுமே உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் சிறப்பு என்னவென்றால் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் கனடா அணி (Canada) 2வது முறையாக தகுதி பெற்றுள்ளது. அமெரிக்காவின் பிராந்திய தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் ஒன்ராறியோவில் பஹாமாஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், 20 அணிகள் பங்கேற்கும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 13வது அணியாக கனடா மாறியுள்ளது .
இதுவரை 13 அணிகள் தகுதி:
இந்தியாவும் இலங்கையும் 2026 டி20 உலகக் கோப்பையை இணைந்து நடத்துவதால் இரு அணிகளும் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதனை தொடர்ந்து, 2024 டி20 உலகக் கோப்பையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2026 டி20 உலகக் கோப்பையில் நேரடியாகப் பங்கேற்கும். அதன்படி, 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். இந்த 8 அணிகளுக்கு பிறகு, தரவரிசையில் அடுத்த 3 இடங்களில் இருக்கும் அணிகள், 2026 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும்.




மீதமுள்ள 8 அணிகள் பிராந்திய தகுதிச் சுற்றுகளின் அடிப்படையில் தகுதி பெறும். இதையடுத்து, பிராந்திய தகுதிச் சுற்றுகளின் அடிப்படையில், ஆப்பிரிக்காவிலிருந்து 2 அணிகளும், ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலிருந்து 3 அணிகளும், ஐரோப்பாவிலிருந்து 2 அணிகளும், அமெரிக்க பிராந்தியத்திலிருந்து ஒரு அணியும் தகுதி பெறும்.
2026 டி20 உலகக் கோப்பையில் இதுவரை தகுதி பெற்ற அணிகள்:
Canada qualify for the 2026 T20 World Cup! 🇨🇦🔥
A historic moment for Canadian cricket on the global stage. pic.twitter.com/t5IWftM793
— CricTracker (@Cricketracker) June 22, 2025
இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா.
கனடா அணி தற்போது தகுதி பெற்றுள்ள நிலையில், 2026 டி20 உலகக் கோப்பைக்கு மேலும் 7 அணிகள் தகுதி பெற உள்ளன. அதன்படி, ஐரோப்பாவிலிருந்து 2 அணிகள் தகுதி பெறும், ஆப்பிரிக்கா தகுதிச் சுற்றுப் போட்டி மூலம் 2 அணிகள் உலகக் கோப்பைக்குள் நுழையும். தொடர்ந்து, ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலிருந்து 3 அணிகள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும்.
முன்னதாக, 2024 டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. இதன் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது.