Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jasprit Bumrah Records: அதிக விக்கெட்கள் வீழ்த்தி அசத்தல்! வெளிநாட்டு மண்ணில் புகுந்து விளையாடும் பும்ரா..

IND vs ENG Test Match: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், ஜஸ்பிரித் பும்ரா அற்புதமான பந்து வீச்சு மூலம் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்தார். இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களான பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை அவர் அவுட் செய்தார். பும்ரா SENA நாடுகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆசிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இங்கிலாந்து 209 ரன்களில் 3 விக்கெட் இழந்து தடுமாறுகிறது.

Jasprit Bumrah Records: அதிக விக்கெட்கள் வீழ்த்தி அசத்தல்! வெளிநாட்டு மண்ணில் புகுந்து விளையாடும் பும்ரா..
ஜஸ்பிரித் பும்ராImage Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Jun 2025 11:18 AM

இங்கிலாந்து அணிக்கு எதிரான லீட்ஸ் முதல் டெஸ்டின்(IND vs ENG 1st Test) 2வது நாளில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) முதல் இன்னிங்ஸில் அற்புதமாக செயல்பட்டார். 2வது நாள் ஆட்டத்தின் முடிவில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியை திணற செய்து சாதனை படைத்தார். ஜஸ்பிரித் பும்ரா முதல் ஓவரிலேயே ஜாக் க்ரௌலியை (4) அவுட்டாக்கினார். இருப்பினும், இந்த இங்கிலாந்து இன்னிங்ஸ் மீண்ட பிறகு, பென் டக்கெட் (Ben Duckett) மற்றும் ஓலி போப் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்தனர். இதையும் பும்ரா முறியடித்தார், அவர் டக்கெட்டை (62) அவுட்டாக்கினார். இதனை தொடர்ந்து, முக்கிய சாதனை ஒன்றையும் படைத்தார்.

இங்கிலாந்து அணியின் மூன்றாவது விக்கெட்டையும் ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 10வது முறையாக ஜோ ரூட்டை (28) அவுட்டாக்கினார். நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்திருந்தது. இதன்மூலம், இந்தியாவை விட இங்கிலாந்து அணி 262 ரன்கள் பின் தங்கியுள்ளது. அதன்படி, இதுவரை இந்தியாவுக்காக முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தியுள்ளார்.

வாசிம் அக்ரமின் சாதனையை முறியடித்த பும்ரா:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இப்போது SENA நாடுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பந்து வீச்சாளர் ஆவார். முன்னதாக இந்த சாதனை வாசிம் அக்ரமின் பெயரில் இருந்தது. தற்போது, அதை பும்ரா முறியடித்துள்ளார். SENA என்பது தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை குறிக்கும் சொல்லாகும்.

பும்ரா SENA நாடுகளில் இதுவரை 60 இன்னிங்ஸ்களில் விளையாடி 148 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பட்டியலில் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு வாசிம் அக்ரம் பின்தங்கியுள்ளார். வாசிம் அக்ரம் இதுவரை SENA நாடுகளில் 55 இன்னிங்ஸ்களில் விளையாடிய 146 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளே 141 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், இஷாந்த் சர்மா 130 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் முகமது ஷமி 123 விக்கெட்டுகளை வீழ்த்தி 5வது இடத்தில் உள்ளார்.

SENA நாடுகளில் ஜஸ்பிரித் பும்ராவின் விக்கெட்டுகள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக – 38
இங்கிலாந்துக்கு எதிராக – 40
நியூசிலாந்திற்கு எதிராக – 6
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக – 64

2ம் நாள் ஆட்டநேர முடிவு:

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸின் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. ஓலி போப் 131 பந்துகளில் 100 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 12 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த 3 விக்கெட்டுகளையும் ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தியுள்ளார். இந்தியா இன்னும் 262 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.