எஸ்பிஐக்கு கொஞ்சம் கொடுங்க சார்… ஆர்சிபி வெற்றி – விஜய் மல்லையாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Vijay Mallya RCB Tweet : ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்ற நிலையில் அந்த அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவரை கலாய்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

எஸ்பிஐக்கு கொஞ்சம் கொடுங்க சார்... ஆர்சிபி வெற்றி - விஜய் மல்லையாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஆர்சிபி வெற்றி குறித்து விஜய் மல்லையா

Published: 

05 Jun 2025 23:29 PM

ஐபிஎல் (IPL) போட்டியின் வரலாற்றில் 18  ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ( Royal Challengers Bengaluru) அணி தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி அந்த அணி ரசிகர்களின் பல ஆண்டு காத்திருப்புக்கு பன் கிடைத்திருக்கு. நிஜமாகவே அவர்கள் இ சால கப் நம்து என சொல்லும் காலம் வந்திருக்கிறது. ஆனால் அந்த வெற்றியை முழுதாக கூட கொண்டாட முடியாத வகையில் பெங்களூருவில் சோக சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஆர்சிபி அணி வெற்றி விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.  மற்றொரு பக்கம் அந்த அணியின், முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா வெளியிட்ட எக்ஸ் பதிவு பேசுபொருளாக மாறியிருக்கிறது.

 விஜய் மல்லையாவின் வாழ்த்து ட்வீட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா தனது எக்ஸ் பக்கத்தில் அந்த அணியின் வெற்றி தொடர்பாக பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆர்சிபி அணியின் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவழியாக சாம்பியானாகியிருக்கிறது. அணியின் குழு மனப்பான்மை, நல்ல பயிற்சி ஆகியவை இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது. வாழ்த்துகள். இ சாலா கப் நம்து என குறிப்பிட்டிருந்தார். அவரது ட்வீட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. பலரும் அவர் பண மோசடியில் ஈடுபட்டதை தொடர்பு படுத்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.

‘எஸ்பிஐக்கு கொஞ்சம் கொடுங்க சார்’

 

விஜய் மல்லையா ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு கடன் கொடுக்க வேண்டியதை சுட்டிக்காட்டி வெற்றிபெற்ற தொகையில் இருந்து எஸ்பிஐக்கு கொஞ்சம் கொடுங்க சார் என ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். மற்றொருவர் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவருக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பதிலளித்திருக்கிறது. அந்த பதிலானது, இந்தியாவுக்கு வாங்க சார். நாம் சேர்ந்து கொண்டோடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. போலியானது போல தோன்றினாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மற்றொரு ரசிகர் இ சாலா லோன் நமதே என குறிப்பிட்டிருக்கிறார்.

விராட் கோலியை வரவேற்கும் விஜய் மல்லையா?

 

இப்படி அவரை விமர்சித்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆர்சிபியின் இந்த வெற்றி அந்த அணியின் நீண்ட காலமாக சிறப்பான பங்களிப்பை வழங்கிய விராட் கோலி போன்றவர்களுக்கு சமர்ப்பணமாக அமைந்துள்ளது. அந்த அணியின் 18 ஆண்டுகாலமாக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் அவருக்கு இந்த வெற்றி தேவையான ஒன்று என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

Related Stories
National Sports Policy 2025: நடைமுறைக்கு வரும் தேசிய விளையாட்டு கொள்கை.. ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி அமைச்சரவை..!
India vs England 2nd Test: வெற்றிக்காக 58 ஆண்டுகள் காத்திருப்பு! இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைக்குமா இந்தியா..?
Rishabh Pant: அபாயத்தில் விராட் கோலி ரெக்கார்ட்.. விரட்டி பிடிப்பாரா ரிஷப் பண்ட்..? காத்திருக்கும் 2வது டெஸ்ட்!
Ind vs Eng 2nd Test: 2வது டெஸ்டுக்கான ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து.. அணியில் ஆர்ச்சருக்கு இடமா?
பயிற்சியில் கடுமையாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர்.. 2வது டெஸ்டில் இந்திய அணியில் இடமா..?
IND vs ENG 2nd Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் பும்ரா களம்.. உறுதியாக சொன்ன இந்திய உதவி பயிற்சியாளர்!