IPL 2026: சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் இவர்களா? கேப்டன் ருதுராஜ் ஓபன் டாக்!
CSK Opening Pair: 10 அணிகளின் கேப்டன்களும் பிசிசிஐ-யை நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பிற்காக மும்பை வந்தடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் தங்கள் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று தெரிவித்தார்.

சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் 2026 சீசனானது (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்குகிறது. அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) தனது முதல் போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வருகின்ற 2026 மார்ச் 30ம் தேதி விளையாடுகிறது. இந்தநிலையில், ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, 10 அணிகளின் கேப்டன்களும் பிசிசிஐ-யை நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பிற்காக மும்பை வந்தடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் தங்கள் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று தெரிவித்தார். ரவீந்திர ஜடேஜாவை விடுவித்த பின்னர், சிஎஸ்கே அணி சஞ்சுவை வர்த்தகத்தின் மூலம் பெற்றது. இதன் தொடர்ச்சியாக சஞ்சு சாம்சன், தோனியின் வாரிசாகக் கருதப்படுகிறார்.
ALSO READ: ஐபிஎல் 2026ல் எந்த 4 அணிகள் பிளே ஆஃப்க்கு தகுதி பெறும்? பட்டியலில் சிஎஸ்கே உள்ளதா?
கேப்டன்கள் கூட்டம்:
கேப்டன்கள் கூட்டத்திற்கு முன்பு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் ஒருவர் ருதுராஜ் கெய்க்வாடிடம் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை குறித்து கேட்கப்பட்டது. அதில், ”எம்.எஸ். தோனியின் பேட்டிங் வரிசையை நீங்கள் இதுவரை வெளியிடவில்லை. உரிய நேரத்தில் தெரியவரும் என்று கூறினீர்கள். ஆனால், அணியின் பேட்டிங் வரிசையை நீங்கள் சொல்லுங்கள். யார் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்குவார்கள். ஆயுஷ் மத்ரே மற்றும் சஞ்சு சாம்சனா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சனா, அல்லது ருதுராஜ் மற்றும் ஆயுஷ் மத்ரேவா?” என்றார்.
சிஎஸ்கே-யின் தொடக்க ஜோடியாக யார் களமிறங்குவார்கள்?
Ruturaj Gaikwad and Sanju Samson will open for CSK in this IPL.pic.twitter.com/WxJlKowXna
— Samosa Theory (@samosatheory) March 26, 2026
அதற்கு பதிலளித்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், “ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே அணிக்காக தானும் சஞ்சு சாம்சனும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்குவோம்” என்றார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், 2026 டி20 உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் சிறப்பாகச் செயல்பட்டு, வெறும் 5 போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் குவித்தார். இதன் காரணமாக தொடர் ஆட்டநாயகன் விருதுக்கு சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது, ஐபிஎல் தொடரிலும் அதே சிறப்பான ஆட்டத்தைத் தொடர ரசிகர்கள் விரும்புகின்றனர்.
ALSO READ: காத்திருக்கும் ரசிகர்கள்! ஐபிஎல் 2026ல் அசத்தப்போகும் 3 கேப்டன்கள் யார்?
ஆயுஷ் மத்ரே எந்த இடத்தில் பேட்டிங் செய்வார்..?
ஆயுஷ் மத்ரே எந்த இடத்தில் பேட் செய்வார் என்ற கேள்வி எழுகிறது. அவர் மூன்றாவது இடத்தில் களமிறங்குவாரா அல்லது அவருக்குப் பதிலாக உர்வில் பட்டேல் பேட்டிங் செய்வாரா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில், ஆல்ரவுண்டர் சிவம் துபே 4வது இடத்திலும், டிவால்ட் பிரெவிஸ் 5வது இடத்திலும் விளையாடக்கூடும். அதிக விலைக்கு வாங்கப்பட்ட பிரசாந்த் வீருக்கு முதல் போட்டியிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கலாம். சிஎஸ்கே பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மாவை ரூ. 14.2 கோடிக்கு வாங்கியது. எம்.எஸ். தோனி 6வது அல்லது 7வது இடத்தில் பேட்டிங் செய்யலாம்.