Rohit Sharma Tweet: கில் கேப்டன்ஷி குறித்து 12 வருடங்களுக்கு முன்பே கணிப்பு.. வைரலாகும் ரோஹித் சர்மா ட்வீட்!
Rohit Sharma Old Tweet Viral: இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாடுவார்களா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்தான் விராட் மற்றும் ரோஹித் சர்மாவிற்கு கடைசி ஒருநாள் தொடராக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

சுப்மன் கில் - ரோஹித் சர்மா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான (IND vs AUS) ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அதாவது 2025 அக்டோபர் 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஒருநாள் அணியில் ஒரு பெரிய மாற்றத்துடன் ரோஹித் சர்மாவுக்கு (Rohit Sharma) பதிலாக இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் (Shubman Gil) நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, ரோஹித் சர்மா 13 வருடத்திற்கு முன்பு போட்ட ட்வீட் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது தற்போது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அதில், ரோஹித் சர்மா கணித்த ஒன்று தற்போது நிறைவேறியுள்ளது.
ரோஹித் சர்மா கணித்தது என்ன..?
End of an era (45) and the start of a new one (77) ….. http://t.co/sJI0UIKm
— Rohit Sharma (@ImRo45) September 14, 2012
கடந்த 2025 அக்டோபர் 4ம் தேதி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளை பிசிசிஐ அறிவித்தது. ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் ஏற்பட்ட மாற்றம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, சுப்மன் கில்லை ஒருநாள் கேப்டனாக நியமித்தது. அதன்படி, சுப்மன் கில் இப்போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக வழிநடத்துவார்.
ALSO READ: வீரராக ரோஹித் சர்மா! கேப்டனாக இளம் வீரர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து, ரோஹித் சர்மா 13 வருடத்திற்கு முன்பு போட்ட ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாக தொடங்கியது. அதில் அவர், ”ஒரு சகாப்தத்தின் முடிவு (45) ஒரு புதிய சகாப்தத்தின் (77) ஆரம்பமாக இருக்கும்.” என்று குறிப்பிட்டிருந்தார். ரோஹித் சர்மாவின் ஜெர்சி எண் 45, கில்லின் ஜெர்சி எண் 77 என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், பல ஆண்டுகளுக்கு முன்பு, ரோஹித் சர்மாவுக்கும் 77 என்ற எண் குறித்து தெளிவு படுத்தியிருந்தார்.
ALSO READ: அவரை மிஸ் செய்யாமல் எப்படி..? அஸ்வின் குறித்து ஜடேஜா உணர்ச்சிவசம்..!
சுப்மன் கில் ஏன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்..?
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை விளையாடுவார்களா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்தான் விராட் மற்றும் ரோஹித் சர்மாவிற்கு கடைசி ஒருநாள் தொடராக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்திய அணிக்கு அடுத்த கேப்டனை தயார்படுத்தும் வகையில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்