Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

BCCI Election 2025: பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர்..? முக்கிய பதவிகளுக்கான தேர்தல் எப்போது?

Roger Binny's BCCI Exit: ரோஜர் பின்னி 70 வயது எல்லை காரணமாக பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் அடுத்த தலைவராக இருக்கலாம் என்ற வதந்திகள் பரவினாலும், அவரது நிறுவனம் அதனை மறுத்துள்ளது. 2025 செப்டம்பர் 28 அன்று பிசிசிஐ தேர்தல் நடைபெற உள்ளது.

BCCI Election 2025: பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர்..? முக்கிய பதவிகளுக்கான தேர்தல் எப்போது?
பிசிசிஐ - சச்சின் டெண்டுல்கர்Image Source: PTI and Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Sep 2025 08:22 AM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) விதிகளின்படி, 70 வயதிற்குப் பிறகு ஒருவர் தலைவர் பதவியை வகிக்க முடியாது. இதனால்தான் ரோஜர் பின்னி தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார். கடந்த 2022ம் ஆண்டு பிசிசிஐ தலைவராக முன்னாள் இந்திய வீரர் ரோஜர் பின்னி பதவியேற்றார். இந்தநிலையில், ரோஜர் பின்னி கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் 70 வயதை கடந்ததால், பதவியில் இருந்து விலகினார். இப்போது பிசிசிஐ புதிய தலைவராக யார் வருவார்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது. இந்தநிலையில், முன்னாள் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) புதிய BCCI தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற கூறப்படுகிறது. இப்போது சச்சின் டெண்டுல்கரின் நிறுவனமான SRT ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் இந்த வைரல் கூற்றுக்கு விளக்கம் அளித்துள்ளது.

பிசிசிஐ தலைவராக சச்சினா..?

இதுகுறித்து எஸ்ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் தனது அறிக்கையில், “சச்சின் டெண்டுல்கர் அடுத்த பிசிசிஐ தலைவராக இருக்கலாம் என்ற செய்திகள் மற்றும் வதந்திகள் குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற எதுவும் நடக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஆதாரமற்ற ஊகங்களை யாரும் நம்ப வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தது.

ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் அதிர்ச்சி.. முழுமையாக விற்காத டிக்கெட்.. அதிருப்தியில் ரசிகர்களா?

பிசிசிஐ தலைவர் தேர்தல் எப்போது..?

வருகின்ற 2025 செப்டம்பர் 28ம் தேதி பிசிசிஐ தேர்தல்கள் நடைபெறவுள்ளது.  2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் அதே நாளில் இது நடைபெறும். இந்தத் தேர்தலில், தலைவர் உட்பட பல பெரிய பதவிகளில் நியமனங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இவற்றில் ஒன்று இந்தியன் பிரீமியர் லீக் தலைவர் பதவியும் ஒன்றாகும்.

ALSO READ: பயிற்சியில் பேட்டிங்கில் சிதறவிடும் ரோஹித் சர்மா.. ஆஸ்திரேலிய தொடருக்கு ஆயுத்தமா..?

பிசிசிஐ தேர்தல்களில், இரண்டு பதவிகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  முதலாவது, 70 வயதான ரோஜர் பின்னியால் காலியாக உள்ள பிசிசிஐ தலைவர் பதவியும், 6 ஆண்டுகள் பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்த பிறகு, ஐசிசி தலைவர் அருண் சிங் துமலும் கூலிங் பிரீயடில் செல்ல உள்ளார். இந்த இரண்டு பதவிகளிலும் புதிய நியமனங்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறது. அதே நேரத்தில் தேவ்ஜித் சைகியா பிசிசிஐ செயலாளர் பதவியில் நீடிக்கலாம். அவரைத் தவிர, இணைச் செயலாளர் பதவி ரோஹன் கவுன்ஸ் தேசாய் மற்றும் பொருளாளர் பதவியில் பிரப்தேஜ் பாட்டியா நீடிக்கலாம்.