Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2023 World Cup Final: மறக்குமா நெஞ்சம்..! நவம்பர் 19, 2023… உலகக் கோப்பையை மிஸ் செய்த இந்திய அணி!

Indian Cricket Team: 2023 உலகக் கோப்பையை இந்திய அணியால் வெல்ல முடியாவிட்டாலும், அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்தது. விராட் கோலியின் 765 ரன்கள், ரோஹித் சர்மாவின் 597 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயரின் 530 ரன்கள் என சிறப்பாக செயல்பட்டனர்.

2023 World Cup Final: மறக்குமா நெஞ்சம்..! நவம்பர் 19, 2023… உலகக் கோப்பையை மிஸ் செய்த இந்திய அணி!
இந்திய அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Nov 2025 12:54 PM IST

நவம்பர் 19, 2023… இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாரும் நினைவில் கொள்ள விரும்பாத நாள். இந்த நாள் இந்திய அணிக்கும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வலியை கொடுத்தது. கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதியான இதே நாளில் 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை (Indian Cricket Team) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால், போட்டி நடைபெற்ற அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் ஒட்டுமொத்தமாக அமைதியடைந்தது. இந்திய கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் அழுத காட்சிகள் இன்றளவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தோல்விக்கு பிறகு10-15 நிமிடங்கள் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆறுதல் பெறமுடியாமல் தவித்தது. அதனை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஐபிஎல் ஏலத்தில் எந்த அணி எத்தனை வீரர்களை வாங்கலாம்? முழு விவரம் இதோ!

நொறுங்கிய இதயம்:

2023 உலகக் கோப்பையை இந்திய அணியால் வெல்ல முடியாவிட்டாலும், அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்தது. விராட் கோலியின் 765 ரன்கள், ரோஹித் சர்மாவின் 597 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயரின் 530 ரன்கள், முகமது ஷமியின் 24 விக்கெட்டுகள், ஜஸ்பிரித் பும்ராவின் 20 விக்கெட்டுகள் என யாரும் மற்ற மாட்டார்கள். இறுதிப் போட்டி வரை இந்திய அணி அரையிறுதி உட்பட 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்தது. இந்தியா இறுதியாக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது.

ALSO READ: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஏ அணி.. பாகிஸ்தான் ஏ அணியுடன் மோதலா?

கலக்கிய விராட் கோலி:

இறுதிப்போட்டியில் நடந்தது என்ன..?

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கே.எல். ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோஹித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர். பதிலுக்கு ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டியது. டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு வில்லனாக மாறி, 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை விளையாடினார். இதனால், மில்லியன் கணக்கான இந்திய ரசிகர்களின் இதயங்களை நொறுக்கி, ஆஸ்திரேலியாவை ஆறாவது முறையாக உலக சாம்பியனாக்கினார்.