IPL 2025: முதல் இடத்திற்கு கடும் போட்டி! பந்தயத்தில் முந்துமா மும்பை..? பஞ்சாப் வெல்லுமா..?
MI vs PBKS: ஐபிஎல் 2025 சீசனின் 69வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் மோதுகின்றன. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக உள்ளது. இரு அணிகளின் ஹெட்-டு-ஹெட் விவரம், பிளேயிங் லெவன் மற்றும் பிட்ச் ரிப்போர்ட் ஆகியவற்றை இந்த கட்டுரை விரிவாக விளக்குகிறது. வெற்றி பெறும் அணி முதல் இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனின் 69வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 26ம் தேதி மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணி தொடங்குகிறது. இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி முதல் இடத்திற்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஹெட் டூ ஹெட், பிளேயிங் லெவன் மற்றும் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
சவாய் மான்சிங் ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி..?
சவாய் மான்சிங் ஸ்டேடியத்தின் பிட்ச் பொதுவாக பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் என இருவருக்கும் உதவியாக இருக்கும். அதேநேரத்தில், வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியின் தொடக்கத்தில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் கொண்டு தாக்குதல் நடத்தலாம். மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் பெரியது என்பதால், பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பது சற்று கடினமான விஷயம்.
சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இதுவரை 63 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 23 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள நிலையில், 2வதாக பேட்டிங் செய்த 40 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி இதுவரை இந்த மைதானத்தில் 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. பஞ்சாப் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதேசமயம் மும்பை இங்கு மொத்தம் 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், மும்பை 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
ஹெட் டூ ஹெட்:
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை 32 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 17 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சீசனில், இரு அணிகளுக்கும் இடையே ஒரே ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றது, அதில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
பஞ்சாப் கிங்ஸ்:
பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், நேஹல் வதேரா, அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரீத் பிரார் (இம்பேக்ட் வீரர்)
மும்பை இந்தியன்ஸ்:
ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் ஷர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா (இம்பேக்ட் வீரர்)