Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கு…. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி

Dhoni defamation case : கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேடு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோனி தொடர்ந்த வழக்கு…. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி
தோனி
Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Oct 2025 17:07 PM IST

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) தாக்கல் செய்த ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கை ரத்து செய்ய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் (High Court) அக்டோபர் 31, 2025 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் தோனி தாக்கல் செய்த வழக்கில் விசாரணை நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. பத்தாண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்த வழக்கு  தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த அக்டோபர் 14, 2025 அன்று விசாரணைக்கு வந்த நலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இந்த வழக்கு அக்டோபர் 31, 2025 அன்று விசாரணைக்கு வந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனையடுத்து தோனி தொடர்ந்த வழக்கின் விசாரணை விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : Football Match: பெங்களூருவில் பதட்டம்.. கால்பந்து ஸ்டேடியத்திற்குள் கத்தியுடன் துரத்திய கும்பல்.. நூலிழையில் தப்பித்த வீரர்..!

வழக்கின் பின்னணி

ஐபிஎல்  சூதாட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார், ஒரு தனியார் தொலைக்காட்சியின் விவாதத்தில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.  இந்த நிலையில் அவரது கருத்துகள் தனது மரியாதைக்கும், பெயருக்கும் களங்கப்படுத்துவதாகக் கூறி தோனி, சம்பத் குமார் மற்றும் அந்த தொலைக்காட்சியை எதிர்த்து, ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இதையும் படிக்க : 7 மாத கர்ப்பம்! 145 கிலோ பளு தூக்கி சாதனை.. வெண்கலம் வென்ற டெல்லி பெண் கான்ஸ்டபிள்!

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சம்பத் குமார் 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, இந்த மனுவை ஏற்றால், பிரதான வழக்கின் தீர்ப்பு மேலும் பல ஆண்டுகள் தாமதமாகும் எனக் கூறி  அவரது மனுவை நிராகரித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக சம்பத் குமார் தாக்கல் செய்த மேல்முறையிட்டு மனு தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு, விசாரணைக்கு பிறகு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.