T20 World Cup 2026: இந்திய போட்டி புறக்கணிப்பு! பாகிஸ்தான் வீரர்களின் திறமையை அழிக்கும் செயல்.. கபில் தேவ் விமர்சனம்!

T20 WC 2026: கடந்த 2026 பிப்ரவரி 1ம் தேதி 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அரசு தனது தேசிய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் என்றும், ஆனால் இந்தியாவுடனான லீக் ஸ்டேஜ் போட்டிகளில் மட்டும் விளையாடாது என்றும் அறிவித்தது. உலகக் கோப்பையில் இருந்து வங்கதேசம் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்தது.

T20 World Cup 2026: இந்திய போட்டி புறக்கணிப்பு! பாகிஸ்தான் வீரர்களின் திறமையை அழிக்கும் செயல்.. கபில் தேவ் விமர்சனம்!

கபில் தேவ்

Published: 

04 Feb 2026 14:54 PM

 IST

மிகவும் எதிர்பார்க்கப்படும் 2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) போட்டியானது வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டியின் அட்டவணையின்படி, இந்தியா vs பாகிஸ்தான் (India vs Pakistan) வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி திட்டமிடப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் ஏற்கனவே இந்திய அணிக்கு எதிராக விளையாட மறுத்துவிட்டதாக ஐசிசியிடம் தெரிவித்திருந்தது. இது உலக கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிர்ச்சியை கொடுத்தது மட்டுமின்றி, இந்த விஷயத்தில் கிரிக்கெட் உலகம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. இதுபோன்ற முடிவு ஒரு தலைமுறை கிரிக்கெட் வீரர்களை முடிவுக்குக் கொண்டுவரும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.

ALSO READ: 2007 முதல் 2024 வரை.. ஒவ்வொரு அணியும் டி20 உலகக் கோப்பையை வென்றது எப்படி?

கடந்த 2026 பிப்ரவரி 1ம் தேதி 2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அரசு தனது தேசிய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் என்றும், ஆனால் இந்தியாவுடனான லீக் ஸ்டேஜ் போட்டிகளில் மட்டும் விளையாடாது என்றும் அறிவித்தது. உலகக் கோப்பையில் இருந்து வங்கதேசம் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்தது. வங்கதேசம் தனது போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றக் கோரிய போதிலும், ஐ.சி.சி அதன் கோரிக்கையை நிராகரித்தது. இதன் காரணமாக, விலகியதாக வங்கதேச கிரிக்கெட் அணி சார்பில் வங்கதேச அரசு அறிவித்தது.

கபில் தேவ் எச்சரிக்கை:


இதுகுறித்து 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் ஊடகங்களிடம் பேசுகையில், ”பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுடன் போட்டியில் விளையாடுவதில்லை என்று முடிவு செய்திருந்தால், அவர்கள் முன்வந்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். ஆனால் நீங்கள் விளையாடக் கூடாது என்று வாரியம் முடிவு செய்யும்போது, ​​நாட்டின் நற்பெயர் குறைகிறது. பாகிஸ்தானுக்கு இது நல்லதாகத் தெரியவில்லை. நீங்கள் ஒரு தலைமுறையையே அழிக்கிறீர்கள். பாகிஸ்தான் பல ஆண்டுகளாக நமக்கு அற்புதமான திறமைகளை வழங்கியுள்ளது. ஆனால் இந்த வீரர்களை உலகக் கோப்பையில் விளையாட அனுமதிக்கவில்லை என்றால், நீங்கள் விளையாட்டுக்குத் தீங்கு விளைவிக்கிறீர்கள், மேலும் உங்கள் சொந்த வீரர்களுக்கே அநீதி இழைக்கிறீர்கள்.” என்றும் கூறினார்.

ALSO READ: மோதும் இந்தியா-தென்னாப்பிரிக்கா.. பயிற்சி ஆட்டம் எப்போது, எங்கே..?

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி புறக்கணிப்பு செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்னும் அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்திய அணிக்கு எதிராக புறக்கணிப்பு செய்தால் பாகிஸ்தான் அணி மீது தடைகள் விதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்ற ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை
இலவச மோமோவிற்காக ரூ.85 லட்சம் மதிப்பிலான நகைகளை பறிகொடுத்த சிறுவன்
பலோசிஸ்தானின் தற்கொலை படை தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த 2 பெண்கள் - யார் இவர்கள்?
முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே