IPL 2026: இது என் பிரச்சனை இல்லை.. பும்ரா குறித்த கேள்விக்கு ஹர்திக் கொடுத்த பதில்!

Hardik Pandya: உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏன் முதல் ஓவர் வழங்கப்படவில்லை என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஐபிஎல் 2026-ன் தொடக்கப் போட்டிகளில், போல்ட் மற்றும் பின்னர் தீபக் சாஹர் முதல் ஓவரை வீசினர். போட்டிக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா, அவரைப் பிந்தைய ஓவர்களில் பயன்படுத்த விரும்பியதாகக் கூறினார்.

IPL 2026: இது என் பிரச்சனை இல்லை.. பும்ரா குறித்த கேள்விக்கு ஹர்திக் கொடுத்த பதில்!

ஜஸ்பிரித் பும்ரா - ஹர்திக் பாண்ட்யா

Published: 

21 Apr 2026 15:08 PM

 IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 ஏப்ரல் 20ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா , முதல் பந்திலேயே ஒரு விக்கெட்டை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு ஒரு சிறப்பான தொடக்கத்தை அளித்தார். ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ராவின் எடுத்த முதல் விக்கெட் இதுவாகும். அதேபோல், இந்த சீசனில் பும்ரா இதுவரை முதல் ஓவரை வீசியது கிடையாது. பும்ராவைப் பற்றி கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, ​​பும்ரா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 7-8 முறை மட்டுமே முதல் ஓவரை வீசியுள்ளார் என்று கூறினார்.

ALSO READ: திலக் வர்மா அதிரடி சதம் – குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி

உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏன் முதல் ஓவர் வழங்கப்படவில்லை என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஐபிஎல் 2026-ன் தொடக்கப் போட்டிகளில், போல்ட் மற்றும் பின்னர் தீபக் சாஹர் முதல் ஓவரை வீசினர். போட்டிக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா, அவரைப் பிந்தைய ஓவர்களில் பயன்படுத்த விரும்பியதாகக் கூறினார்.

ஹர்திக் பாண்ட்யா சொன்னது என்ன..?


மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டிக்குப் பிறகு கூறுகையில், “இது மிகவும் சுவாரஸ்யமானது. ஜஸ்பிரித் பும்ராவை ஏன் தொடக்கத்தில் பந்துவீச வைப்பதில்லை என்று பலர் கேட்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், பும்ரா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 7 அல்லது 8 முறை மட்டுமே முதல் ஓவரை வீசியுள்ளார். எனவே இது ஹர்திக் பாண்ட்யாவின் பிரச்சனை மட்டுமல்ல, இது அனைவரின் பிரச்சனை. ஏனென்றால் ஜஸ்பிரித் ஒரு மிகச் சிறப்பான பந்துவீச்சாளர். அவருடைய ஓவர்களைப் போட்டியின் பிற்பகுதிக்காகச் சேமித்து வைக்கவே நாம் விரும்புவோம்.” என்று தெரிவித்தார்.

போட்டியில் நடந்தது என்ன..?

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 199 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ரன்கள் எடுத்தார். கடைசிப் பந்தில் ஒரு பவுண்டரி அடித்து தனது சதத்தை எட்டினார். இது அவரது முதல் ஐபிஎல் சதம் மற்றும் இன்றுவரை மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த அதிவேக சதம் இதுவாகும். இதன்மூலம். முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜெயசூரியாவின் சாதனையை (45 பந்துகளில் சதம்) சமன் செய்தார்.

ALSO READ: வேகம் காட்டிய மும்பை.. சோகத்தில் சிஎஸ்கே.. ஐபிஎல் புள்ளி பட்டியல் லேட்டஸ்ட் இதோ!

இலக்கைத் துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சொதப்பினர். குஜராத் அணியின் 7 பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்களை எட்டத் தவறினர். மும்பை அணியின் முக்கிய வீரரான அஷ்வனி குமார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதேநேரத்தில், அல்லா கசன்ஃபர் மற்றும் மிட்செல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டை எடுத்திருந்தனர்.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..