IPL 2026 Mini Auction: இந்தியாவில் இல்லை.. ஐபிஎல் 2026 மினி ஏலம் இங்குதான்.. சூப்பர் அப்டேட் கொடுத்த பிசிசிஐ!
IPL 2026 Mini Auction Venue: ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒரு பெரிய வர்த்தக சாளரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம். கிரிக்பஸ் அறிக்கையின்படி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனுக்கு ஈடாக சஞ்சு சாம்சனுக்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) 2026க்கு தொடங்க இன்னும் 3 மாதத்திற்கு மேலாக உள்ள நிலையில், இதற்கு முன்னதாக ஒரு மினி ஏலம் நடத்தப்பட இருக்கிறது. அந்தவகையில், ஐபிஎல் 2026 மினி ஏலம் எப்போது, எங்கு நடைபெறும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட்டை வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு சீசன்களை போலவே, ஐபிஎல் 2026 ஏலம் வெளிநாட்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிற்கு வெளியே ஏலம் நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு, இது 2023 சீசன் துபாயிலும், 2024 சீசன் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும் நடைபெற்றது.
ஐபிஎல் மினி ஏலம் எங்கு நடைபெறவுள்ளது..?
The IPL mini-auction is reportedly set to be held on December 15 or 16 in Abu Dhabi.#IPLAuction #IPL2026 pic.twitter.com/KjJXY6hP0y
— Circle of Cricket (@circleofcricket) November 10, 2025
ஐபிஎல் 2026க்கான ஏலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மூத்த அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டார். அதில், ”கடந்த 2025ம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடந்த மெகா ஏலத்தைத் தொடர்ந்து, இந்த முறை ஒரு மினி ஏலம் நடத்தப்படவுள்ளது. இந்த ஏலம் நடத்தப்படும் இடமாக அபுதாபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.




வருகின்ற 2025 டிசம்பர் 15 அல்லது 16 ஆம் தேதி ஏலம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் ஏலத்தை காண்பதற்கு என்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதாவது தங்களுக்குப் பிடித்த அணி எந்த வீரரை ஏலத்தில் வாங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இருப்பினும், ஏலத்திற்கு முன்பு ஒரு வர்த்தக சாளரமும் திறந்திருக்கும். இது வீரர் பரிமாற்றங்களுக்கு அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த சாளரமும் ஏலம் நடைபெறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு மூடப்படும்.
ஏலத்திற்கு முன்பு அணி மாறுமா?
ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒரு பெரிய வர்த்தக சாளரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படலாம். கிரிக்பஸ் அறிக்கையின்படி, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனுக்கு ஈடாக சஞ்சு சாம்சனுக்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏலத்திற்கு முன்பு சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் சேரலாம்.
வர்த்தக சாளரம் என்பது எந்தவொரு ஐபிஎல் உரிமையாளரும் மற்றொரு உரிமையாளருடன் வீரர்களை பரிமாறிக்கொள்ளக்கூடிய நேரடி பரிமாற்ற முறையாகும். 10 அணிகளும் தங்கள் பலவீனமான வரிசைகளை வலுப்படுத்த இந்த சாளரத்தைப் பயன்படுத்துகின்றன. இந்த சாளரம் ஐபிஎல் 2025 சீசன் முடிந்த சரியாக ஏழு நாட்களுக்குப் பிறகு திறந்து ஏலத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்பு மூடப்பட இருக்கிறது.