IND vs SA Test Series: 3 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்.. இந்திய அணியில் இல்லாத இடம்.. ஷமியை தண்டிக்கிறதா பிசிசிஐ?
Mohammed Shami: ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவரது உடற்தகுதி குறித்து கேள்விகள் எழுந்தபோது, ஷமி 4 நாள் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாட முடிந்தால், 50 ஓவர் ஒருநாள் போட்டியிலும் விளையாட முடியும். சிறப்பாகச் செயல்படுவதே தனது வேலை என்றும் முகமது ஷமி கூறினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நேற்று அதாவது 2025 நவம்பர் 5ம் தேதி அறிவித்தது. இந்த தொடரில் சுப்மன் கில்லின் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில், ரிஷப் பண்ட் (Rishabh Pant) துணை கேப்டனாக அணிக்கு திரும்பினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெறாத ஆகாஷ் தீப்பிற்கு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
மீண்டும் நீக்கப்பட்ட முகமது ஷமி:
முகமது ஷமி தற்போது ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். ரஞ்சி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முகமது ஷமி உத்தரகண்ட் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளையும், குஜராத்துக்கு எதிராக 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். முகமது ஷமி இரண்டு இன்னிங்ஸ்களில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி மொத்தம் 95 ஓவர்கள் வீசினார். இதன்மூலம், இரண்டு போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முமது ஷமி சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.




ALSO READ: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்… துணை கேப்டனாக களமிறங்கும் ரிஷப் பண்ட்!
சமீபத்தில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஷமி ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேட்டபோது, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் அவரது உடற்தகுதி குறித்து பேசியதாவது, ”முகமது ஷமி முழுமையாக உடற்தகுதி பெற்றிருந்தால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கும் சென்றிருப்பார். முகமது ஷமி ரஞ்சி டிராபியில் விளையாடி வருவதால், பின்னர் பரிசீலிக்கப்படுவார்” என்று கூறினார்.
ஷமியை தண்டிக்கிறதா பிசிசிஐ?
Ajit Agarkar last month said, we would select Mohammed Shami in tests if he proves his fitness but there is no Shami in any squad. He is among India’s all time greatest & mid cricketer Agarkar is treating him like if he is some gully level bowler.
He was told to play domestics &… pic.twitter.com/QcA2Dzw7iY
— Rajiv (@Rajiv1841) November 5, 2025
முன்னதாக, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவரது உடற்தகுதி குறித்து கேள்விகள் எழுந்தபோது, ஷமி 4 நாள் ரஞ்சி டிராபி போட்டியில் விளையாட முடிந்தால், 50 ஓவர் ஒருநாள் போட்டியிலும் விளையாட முடியும். சிறப்பாகச் செயல்படுவதே தனது வேலை என்றும் முகமது ஷமி கூறினார். இதனால், பிசிசிஐக்கு எதிராக முகமது ஷமி கேள்வி எழுப்பிய நிலையில், பிசிசிஐ இடம் கொடுக்காமல் முகமது ஷமியை தண்டிக்கிறதா என்று கேள்வி எழுகிறது.
ALSO READ: 2026ல் இந்திய கிரிக்கெட் அணி எப்போது யாருடன் விளையாடுகிறது..? முழு அட்டவணை இதோ!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா , அக்சர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ்.