AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

KKRvsLSG: முகுல் சௌத்ரி அசத்தல் அரை சதம் – கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி

IPL 2026: ஐபிஎல் சீசன் 2026 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி பெற்றது. குறிப்பாக முகுல் சௌத்ரி தனி ஆளாக போராடி லக்னோவிற்கு வெற்றி தேடி தந்தார்.

KKRvsLSG:   முகுல் சௌத்ரி அசத்தல் அரை சதம் – கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி
முகுல் சௌத்ரி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 Apr 2026 23:47 PM IST

ஐபிஎல் சீசன் 2026 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி பெற்றது. ஒவ்வொரு போட்டியும் நிறைவடையும்போது, ​​புள்ளிப்பட்டியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவரை 15 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 15வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின.

கொல்கத்தாவை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி

இப்போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் ஜெயண்ட்ஸ் களமிறங்கியது.

இதையும் படிக்க : இனி இந்த வீரர்கள் மைதானத்திற்குள் போக முடியாது – ஐபிஎலுக்கு பிசிசிஐ கட்டுப்பாடு – இதுதான் காரணமா?

முகுல் சௌத்ரி அதிரடி அரை சதம்

 

இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழந்த வண்ணம் இருந்ததால் ஆட்டத்தின் போக்கு கொல்கத்தா பக்கமே இருந்தது. இடையில் ஆயுஷ் பதோனி தனி ஆளாக போராடி அரை சதம் கடந்தார். ஆனால் அவரும் அவுட்டாக கிட்டத்தட்ட வெற்றி கொல்கத்தா வசம் சென்றது. இந்த நிலையில் 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய முகுல் சௌத்ரி தனி ஒரு ஆளாக போராடி ஆட்டத்தை மீண்டும் லக்னோ வசம் திருப்பினார். ஒரு சிறப்பான அரைசதம் அடித்த அவர், அணியின் வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென விழுந்து கொண்டிருந்த போதிலும், அவர் கிட்டத்தட்ட தனி ஆளாகவே தனது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இறுதியில், இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஒரு ஒற்றை ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

இதையும் படிக்க : IPL 2026: ஆரஞ்சு தொப்பியுடன் ஜெய்ஸ்வால்.. பர்ப்பிள் கேப் யாரிடம் உள்ளது..? முழு விவரம்!

கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், 2 சிக்சர்கள், ஒரு சிங்கிள் என அதிரடி காட்டினார். குறிப்பாக கடைசி 4 பந்தில் 2 டாட் பால் வந்தபோது ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த நிலையில் கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் ஒரு சிக்சர், ஒரு சிங்கிள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் அந்த அணி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது

 

Follow Us