IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்.. பட்டியலில் ரோஹித் சர்மா..!

Most Ducks in IPL History: விராட் கோலி, ரோஹித் சர்மா உள்பட பல அனுபவ வீரர்கள் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும், ரோஹித் சர்மா உள்பட பல முக்கிய வீரர்கள் கூட சில நேரங்களில் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியனுக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டாகி ஆட்டமிழந்த வீரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்.. பட்டியலில் ரோஹித் சர்மா..!

ஐபிஎல்லில் அதிக டக் அவுட்

Published: 

14 Mar 2026 16:19 PM

 IST

உலகின் மிகவும் பிரபலமான டி20 லீக்குகளில் ஒன்றான ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி நடைபெறவுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ரன் எண்ணிக்கை, பந்துவீச்சு என பல வீரர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். விராட் கோலி, ரோஹித் சர்மா உள்பட பல அனுபவ வீரர்கள் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும், ரோஹித் சர்மா (Rohit Sharma) உள்பட பல முக்கிய வீரர்கள் கூட சில நேரங்களில் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியனுக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டாகி ஆட்டமிழந்த வீரர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஐபிஎல் 2026 சீசனுடன் தோனி ஓய்வு நிச்சயம்..? முன்னாள் சிஎஸ்கே வீரர் உறுதி..!

கிளென் மேக்ஸ்வெல் – 19 டக் அவுட்கள்

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டாகி ஆட்டமிழந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் க்ளென் மேக்ஸ்வெல் முதலிடத்தில் உள்ளார். க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல்லில் 2012 மற்றும் 2025 க்கு இடையில் இதுவரை 141 ஐபிஎல் போட்டிகளில் 135 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். இதில், 19 முறை ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அதேநேரத்தில், ஐபிஎல்லில் மேக்ஸ்வெல் 155 ஸ்ட்ரைக் ரேட்டில் 2,819 ரன்களை எடுத்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் – 18 முறை டக் அவுட்கள்

இந்தியாவின் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். இருப்பினும், இந்தப் பட்டியலில் தினேஷ் கார்த்திக் இரண்டாவது இடத்தில் உள்ளார். தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் 257 போட்டிகளில் விளையாடி, 18 முறை டக் அவுட்டாகியுள்ளார். தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் 4,800 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா – 18 முறை டக் அவுட்கள்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ரோஹித் சர்மாவும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது மோசமான செய்தி. ரோஹித் சர்மா ஐபிஎல்லில் 2 சதங்கள் உள்பட 7,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதுபோன்ற போதிலும், ரோஹித் சர்மா 18 முறை ரன் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

சுனில் நரைன் – 17 டக் அவுட்கள்

சுனில் நரைன் பொதுவாக தனது அபாயகரமான பந்துவீச்சாளராக பார்க்கப்பட்டாலும், ஐபிஎல்லில் பல முறை தொடக்க பேட்ஸ்மேனாகவும் களமிறங்கியுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி, பல முறை அதிவேகமாகவும் ரன்களை குவித்துள்ளார். இருப்பினும், வேகமாக விளையாட முயன்று 17 முறை நரைன் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

ALSO READ: பயிற்சி அமர்வுகளில் இனி இது கிடையாது.. ஐபிஎல் அணிகளுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிசிசிஐ!

ரஷீத் கான் – 16 டக் அவுட்கள்

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டாகி ஆட்டமிழந்த பட்டியலில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானும் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல்லில் இதுவரை 136 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத் கான், 6 முறை ரன் எதுபும் அடிக்காமல் வெளியேறியுள்ளார்.

Follow Us
மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட பெண் உயிரோடு வந்ததால் பரபரப்பு - பிலிபித்தில் நடந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் விளக்கம்”
எரிவாயு தட்டுப்பாடு.. சிறிய உணவகங்கள் மூடல், கருப்புச் சந்தையில் சிலிண்டர் ரூ.3000 வரை உயர்வு..
ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்ல இந்தியாவுக்கு அனுமதி.. வெளிய்றவுத்துறை அமைச்சர் சொன்ன விஷயம்..
ஈராக் அருகே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு