IPL 2026 Auction: வெங்கடேஷ் ஐயருக்கு ஆர்சிபி போட்ட கொக்கி.. ரூ. 7 கோடிக்கு மடக்கி அணியில் சேர்ப்பு!
Venkatesh Iyer : 2025 ஐபிஎல் ஏலத்தில் 4வது அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை வெங்கடேஷ் ஐயர் பெற்றார். இருப்பினும், முந்தைய பதிப்பில் 11 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் உள்பட 142 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

வெங்கடேஷ் ஐயர்
2026 ஐபிஎல் மினி ஏலத்தில் (IPL 2026 Mini Auction) இந்திய ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை (Venkatesh Iyer) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 7 கோடிக்கு வாங்கியது. முன்னதாக, வெங்கடேஷ் ஐயர் தனது அடிப்படை விலையான ரூ. 2 கோடி களமிறங்கினர். சில அணிகள் அவரை ஆரம்பக்கட்டத்தில் எடுக்க யோசித்த நிலையில், ஆர்சிபி அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஆர்வம் காட்டியது. முன்னதாக, 2025 மெகா ஐபிஎல் ஏலத்தின்போது ரூ.23.75 கோடிக்கு வாங்கியது. ஆனால், எதிர்பார்க்கபடி சிறப்பாக செயல்படவில்லை. இதன் விளைவாக, ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக விடுவித்தது.
ALSO READ: புதிதாக 19 வீரர்கள்.. பட்டியலை நீட்டித்த பிசிசிஐ.. எதிர்பார்ப்பை தூண்டும் ஐபிஎல் 2026 மினி ஏலம்!
ஐபிஎல்லில் வெங்கடேஷ் ஐயரின் செயல்திறன் எப்படி..?
Left-hand fire and fearless intent. 🔥
A big stage performer, Venkatesh Iyer, brings explosive top-order power and all-around punch. 👊
He’s that kind of player who shifts momentum, FAST. 😮💨Welcome to RCB, Venkatesh Iyer. ❤️🔥#PlayBold #ನಮ್ಮRCB #IPLAuction #BidForBold pic.twitter.com/vEx4NuXUDD
— Royal Challengers Bengaluru (@RCBTweets) December 16, 2025
2025 ஐபிஎல் ஏலத்தில் 4வது அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை வெங்கடேஷ் ஐயர் பெற்றார். இருப்பினும், முந்தைய பதிப்பில் 11 போட்டிகளில் 7 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் உள்பட 142 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேநேரத்தில், ஐபிஎல்லில் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், 62 போட்டிகளில் 29.95 சராசரியாகவும், 137.32 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 1,468 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 12 அரை சதங்கள் அடங்கும். இதுமட்டுமின்றி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ALSO READ: கேமரூன் க்ரீனுக்கு பக்கா குறி.. ரூ. 25.20 கோடிக்கு தூக்கிய கொல்கத்தா அணி!
குறைந்த சம்பளம்:
Venkatesh Iyer joins the defending champions 😎
The all-rounder will play for @RCBTweets for INR 7 Crore ❤️ #TATAIPL | #TATAIPLAuction pic.twitter.com/Lcrz8xsquu
— IndianPremierLeague (@IPL) December 16, 2025
2026ம் ஆண்டு வெங்கடேஷ் ஐயரின் ஐபிஎல் சம்பளம் 70.53 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ரூ. 23.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால், இந்த முறை வெங்கடேஷ் ஐயரை ரூ.7 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியது. அதன்படி, இந்த வருடம் வெங்கடேஷ் ஐயரின் ஐபிஎல் சம்பளம் ரூ. 16.75 கோடி குறைந்துள்ளது.