IPL 2025 Qualifier 2: இறுதிப்போட்டிக்கு எந்த அணி தகுதி..? கடுமையாக மோதப்போகும் பஞ்சாப் – மும்பை!

Mumbai Indians vs Punjab Kings: ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2ல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ஜூன் 1 அன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளின் நேருக்கு நேர் போட்டி வரலாறு, பிட்ச் அறிக்கை, வானிலை முன்னறிவிப்பு மற்றும் கணிக்கப்பட்ட அணி அமைப்பு இங்கு தரப்பட்டுள்ளது. வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்த போட்டி பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே உள்ளன.

IPL 2025 Qualifier 2: இறுதிப்போட்டிக்கு எந்த அணி தகுதி..? கடுமையாக மோதப்போகும் பஞ்சாப் - மும்பை!

மும்பை இந்தியன்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ்

Published: 

01 Jun 2025 08:00 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) குவாலிஃபையர் 2ல் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது 2025 ஜூன் 1ம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு விளையாடுகிறது. எலிமினேட்டரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபையர் 2க்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி, இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும். இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பிளேயிங் லெவன், ஹெட் டூ ஹெட், பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.

ஹெட் டூ ஹெட்:

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 33 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், மும்பை அணி அதிகபட்சமாக 17 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 6 போட்டிகளில் விளையாடி பஞ்சாப் அணி 4ல் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், மும்பை அணி 6 போட்டிகளில் விளையாடி 1ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

வானிலை எப்படி..?

அக்யூவெதர் வலைத்தளத்தின்படி, 2025 ஜூன் 1ம் தேதி மாலையில் அகமதாபாத்தில் மழை பெய்ய 40 சதவீதம் வாய்ப்பு உள்ளது, மேலும் மேகமூட்டமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை அதிகமாக பெய்தாலும், ரிசர்வ் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை சுமார் 33 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்..?

ஐபிஎல் 2025ல் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. இங்கு, 200க்கும் அதிகமான ஸ்கோர்கள் பல முறை அடிக்கப்பட்டுள்ளன. மேலும் இலக்குகளைத் துரத்தும் அணிகளும் சிறப்பாக செயல்பட்டுள்ளன. அதன்படி, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

பஞ்சாப் கிங்ஸ்:

பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மதுல்லா ஓமர்சாய், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன்.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா, ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ரிச்சர்ட் க்ளீசன்.