IPL 2025: பழிவாங்க காத்திருக்கும் பெங்களூரு! மீண்டும் வெற்றி காணுமா பஞ்சாப்..? யாருக்கு சாதகம்..?

Punjab Kings vs Royal Challengers Bangalore: ஐபிஎல் 2025 இன் 37வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. முல்லன்பூர் மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமானது என்றாலும், கடந்த போட்டிகளின் அடிப்படையில், சமநிலையான போட்டி எதிர்பார்க்கலாம். வானிலை மழையின்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 34 போட்டிகளில் பஞ்சாப் 18 முறையும், பெங்களூரு 16 முறையும் வென்றுள்ளன.

IPL 2025: பழிவாங்க காத்திருக்கும் பெங்களூரு! மீண்டும் வெற்றி காணுமா பஞ்சாப்..? யாருக்கு சாதகம்..?

பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Published: 

20 Apr 2025 10:18 AM

ஐபிஎல் 2025ல் (IPL 2025) 37வது போட்டியில் இன்று அதாவது ஏப்ரல் 20ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியும் (Punjab Kings), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bengaluru) மோதுகிறது. இந்த போட்டியானது முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திரா சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த 2 அணிகளும் பெங்களூரு ஸ்டேடியத்தில் நேருக்குநேர் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியது. போட்டியை நடத்தும் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஷ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துவார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரஜத் படிதர் வழிநடத்துவார். இந்தநிலையில், முல்லன்பூர் பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

முல்லன்பூர் பிட்ச் எப்படி..?

முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 15.1 ஓவர்களில் வெறும் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தனர். இங்குள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்தாலும், கடந்த போட்டியைப் பார்த்த பிறகு, பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள் மற்றும் பீல்டர்களிடமிருந்து கடுமையான போட்டி இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுவரை இங்கு நடைபெற்ற 8 ஐபிஎல் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணி 5 முறையும், பின்னர் பேட்டிங் செய்த அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

வானிலை எப்படி..?

வட இந்தியாவிலும் கோடைக்காலம் தொடங்கிவிட்டது. பல இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் தாண்டியுள்ளது. அதன்படி, போட்டி நாளான இன்று தொடக்கத்தில் வெப்பநிலை சுமார் 34 டிகிரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின்போது அதிகபட்சமாக 30 டிகிரியும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. போட்டியில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முழு போட்டியையும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல்லில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதுவரை 34 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு 16 முறையும், பஞ்சாப் 18 முறையும் வென்றுள்ளது. 2024 ஆம் ஆண்டில், இரு அணிகளும் இரண்டு முறை நேருக்கு நேர் மோதின. இந்த இரண்டு முறையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. கடந்த 5 போட்டிகளில் பெங்களூரு அணி அதிகபட்சமாக 3 போட்டிகளிலும், பஞ்சாப் 2 முறையும் வென்றுள்ளது. இந்த ஐபிஎல் 2025 சீசனில் விளையாடிய ஒரே போட்டியில் பஞ்சாப் அணி வென்றிருந்தது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

பஞ்சாப் கிங்ஸ்:

பிரியன்ஸ் ஆர்யா, நேஹால் வதேரா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷஷாங்க் சிங், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் பிரார், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ஸ்வப்னில் சிங், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்.

Related Stories
India vs England Test Series 2025: ரோஹித், கோலிக்கு மாற்று வீரர்கள் யார்? இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி இதுதானாம்..!
IPL 2025 Resumes: ஐபிஎல் விளையாடுவது வீரர்களின் தனிப்பட்ட முடிவு.. பிசிசிஐ ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
2027 Cricket World Cup: 2027ல் ஒருநாள் உலகக் கோப்பை! கோலி, ரோஹித் விளையாட மாட்டார்களா? சுனில் கவாஸ்கர் கருத்து!
IPL 2025 Restart: மாற்றப்பட்ட அட்டவணை.. மாற்றப்பட்ட இறுதிப்போட்டி.. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் 2025!
IPL 2025 Restart: மே 16 முதல் ஐபிஎல் மீண்டும் தொடங்குமா? 3 அட்டவணைகளை தயாரித்த பிசிசிஐ.. கிடைத்த சூப்பர் அப்டேட்!
Virat Kohli Missed Milestones: விராட் கோலியின் நிறைவேறாத கனவு இதுதான்! டெஸ்டில் இந்த சாதனைகள் எல்லாம் மிஸ்..!