IND vs SL 5th T20: சம்பவம் செய்த இந்திய மகளிர் அணி.. 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!

India Women vs Sri Lanka Women 5th T20I: இலங்கை அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு டி20 தொடரை இந்திய அணி வெயிட் வாஷ் செய்வது இதுவே முதல் முறையாகும். 

IND vs SL 5th T20: சம்பவம் செய்த இந்திய மகளிர் அணி.. 15 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!

இந்திய மகளிர் அணி

Updated On: 

30 Dec 2025 22:44 PM

 IST

இலங்கை அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி (IND W vs SL W 5th T20) வெற்றி பெற்று தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு டி20 தொடரை இந்திய அணி வெயிட் வாஷ் செய்வது இதுவே முதல் முறையாகும். 2025ம் ஆண்டின் கடைசி தொடரான இந்தியா – இலங்கை இடையிலான 5வது டி20 போட்டியில் இலங்கையை இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி (Indian Womens Cricket Team)  5-0 என்ற கணக்கில் வென்றது. திருவனந்தபுரத்தில் நடந்த 5வது டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 175 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்காக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்  அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்து அரைசதம் அடித்தார். இந்த வெற்றியுடன், இந்தியா 2025 ஆம் ஆண்டுக்கு விடைபெற்றது.

ALSO READ: கடைசி போட்டியில் 62 ரன்கள் மட்டுமே தேவை.. கில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!

176 ரன்கள் இலக்கு:


176 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. கேப்டன் சாமரி அட்டப்பட்டு வெறும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஹாசினி பெரேரா மற்றும் இமேஷா துலானி ஆகியோர் 2வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் கூட்டணி அமைத்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தினர். பெரேரா 65 ரன்களும், துலானி 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில், இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. இதன் காரணமாக, இலங்கை மகளிர் அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் தொடர்ச்சியான விக்கெட்டுகள் விழத் தொடங்கின. 100/2 என்ற நிலையில் இருந்து, இலங்கையின் ஸ்கோர் விரைவாக அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களாக சரிந்தது. எளிதாக சொல்ல வேண்டுமென்றால் இலங்கை மகளிர் அணி வெறும் 25 பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

ALSO READ: 2025ம் ஆண்டில் கலக்கிய இந்திய கிரிக்கெட் அணிகள்.. படைத்த மாபெரும் சாதனைகள் பட்டியல்!

 முழுமையாக வெற்றி பெற்ற இந்தியா:

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்தியா.

Related Stories
On This Day 2014: 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்.. டெஸ்டில் ஓய்வை அறிவித்த எம்.எஸ்.தோனி! இந்திய ரசிகர்கள் ஷாக்!
Smriti Mandhana: கடைசி போட்டியில் 62 ரன்கள் மட்டுமே தேவை.. கில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
IND W vs SL W 5th T20: இந்தியா – இலங்கை இடையிலான 5வது டி20.. முழுமையான வெற்றியை பதிவு செய்யுமா ஹர்மன்ப்ரீத் படை?
Year Ender 2025: 2025ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் மிக குறைந்த ஸ்கோர்.. டாப் 2வில் இந்திய அணி!
Smriti Mandhana Records: குறைந்த இன்னிங்ஸில் 10,000 ரன்கள்.. டி20யில் அதிக சிக்ஸர்கள்.. மிரட்டும் ஸ்மிருதி மந்தனா!
Indian Head Coach: கவுதம் கம்பீருக்கு பதிலாக விவிஎஸ் லட்சுமணன்.. டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளர்? பிசிசிஐ அப்டேட்!
10வது மாடியில் இருந்து விழுந்த நபர்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஆச்சரியம்..
60வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான்.. அவரது ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்..
விசா நேர்காணல்களை ரத்து செய்த அமெரிக்கா - இந்தியா கவலை
பாகிஸ்தானில் பணக்கார இந்து பெண்.. யார் இவர்? நிகர மதிப்பு என்ன தெரியுமா?