Cricket Stadium Drone Attack: கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ட்ரோன் அட்டாக்.. அச்சத்தில் ரசிகர்கள்! போட்டி நடைபெறுமா..?
India-Pakistan Conflict Escalates: இந்தியாவின் ஆபரேஷன் சிந்து தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் பதிலடியாக ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது, இதில் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகேயும் தாக்குதல் நடந்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு (Pahalgam Terror Attack) பழிவாங்கும் முயற்சியில் நேற்று அதாவது 2025 மே 7ம் தேதி அதிகாலை இந்திய இராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் முகாமிட்டு இருந்த பயங்கரவாத கும்பல்களை ஏவுகணை மூலம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. இதன்பிறகு, பாகிஸ்தான் இராணுவமும் ஜம்மு காஷ்மீர் (Jammu and Kashmir) எல்லை பகுதிகளில் உள்ள உள்ளூர்வாசிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கும் இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் (Rawalpindi Cricket Stadium) ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்துள்ளது. அதேநேரத்தில் இந்த ஸ்டேடியத்தில் இன்றிரவு (2025, மே 8ம் தேதி) பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) போட்டி நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ரத்தா..?
Location – Rawalpindi
Enjoy the commentary 😂 pic.twitter.com/0CecgGkG8M
— THE INTREPID 🇮🇳 (@Theintrepid_) May 8, 2025
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இன்று அதாவது 2025 மே 8ம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி இடையேயான போட்டி நடைபெற இருந்தது. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்ததுபோல், பாகிஸ்தானில் பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பாகிஸ்தானில் இந்திய இராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு, லீக்கில் விளையாடி வரும் வெளிநாட்டு வீரர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் சூப்பர் லீக் ரத்து செய்யப்படலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட பகுதிகள்:
An Indian drone has hit Rawalpindi Cricket Stadium. The stadium is hosting the PSL tournament, where Peshawar and Karachi will be playing tonight at 8:00 PM. pic.twitter.com/MNwoh1kwbl
— Ihtisham Ul Haq (@iihtishamm) May 8, 2025
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாக்க முயற்சி:
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முயற்சியாக, பாகிஸ்தான் இந்தியாவில் 15 இராணுவ முகாம்களை தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாகூர் அருகே வான் பாதுகாப்பு ரேடார் அமைப்புகளை அழித்தது. இரு நாடுகளும் கடந்த 2 நாட்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை கைகளில் எடுத்துள்ளது. அதன்படி, அதிகரிக்கும் பதட்டங்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.