IND vs SA 3rd ODI: 20 போட்டிகளில் டாஸ் லாஸ்.. இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்! கடைசியாக வென்ற கே.எல்.ராகுல்!

KL Rahul winning the Toss: 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டாஸ் வென்றார். அதன் பிறகு, அனைத்து இந்திய கேப்டன்களும் ஒருநாள் போட்டிகளில் டாஸை இழந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கே.எல். ராகுல் டாஸை இழந்தார்.

IND vs SA 3rd ODI: 20 போட்டிகளில் டாஸ் லாஸ்.. இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்! கடைசியாக வென்ற கே.எல்.ராகுல்!

இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்

Published: 

06 Dec 2025 14:50 PM

 IST

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் கே.எல். ராகுல் (KL Rahul) டாஸ் வென்றார். டாஸ் வென்றது பெரிய விஷயமா என்று கேட்டால், இந்திய அணிக்கு மிகப்பெரிய விஷயம்தான். அதாவது, தொடர்ச்சியாக 20 டாஸ்களை இழந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணி இன்றைய ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ளது. கடைசியாக இந்திய அணியின் (Indian Cricket Team) ஒருநாள் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்றார். இதன்மூலம், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டாஸை வென்றுள்ளது.

ALSO READ: விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும் விராட் கோலி.. ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

கடைசி டாஸ் வெற்றி எப்போது..?

2023 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டாஸ் வென்றார். அதன் பிறகு, அனைத்து இந்திய கேப்டன்களும் ஒருநாள் போட்டிகளில் டாஸை இழந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் கே.எல். ராகுல் டாஸை இழந்தார். இன்று அதாவது 2025 டிசம்பர் 6ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுலின் அதிர்ஷ்டம் மாறியது. இந்த முறை, ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தார்.

டாஸ் போட்ட பிறகு இந்திய கேப்டன் கே.எல். ராகுல் என்ன சொன்னார் தெரியுமா?


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பிறகு, கே.எல். ராகுல் கூறுகையில், ”பனியைக் கருத்தில் கொண்டு, இலக்கைத் துரத்துவது நல்லது. முதலில் பந்து வீசுவது நல்லது. நேற்று இரவு நாங்கள் இங்கு பயிற்சி செய்தோம். பனி பெய்தது, ராஞ்சி மற்றும் ராய்ப்பூரில் போல சீக்கிரமாக வரவில்லை. இலக்கைத் துரத்த விரும்புகிறோம். முதலில் எப்படி பந்து வீசுகிறோம் என்று பார்ப்போம். விக்கெட் நன்றாக இருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் விளையாடிய விதத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம், மேலும் நிறைய நேர்மறையான அம்சங்களும் உள்ளன” என்று தெரிவித்தார்.

3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி , ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா

ALSO READ: விராட் கோலியின் தொடர் சதங்கள் – நொடியில் விற்றுத்தீர்ந்த 3வது போட்டிக்கான டிக்கெட்டுகள் – எகிறும் எதிர்பார்ப்பு

3வது ஒருநாள் போட்டிக்கான தென்னாப்பிரிக்காவின் ஆடும் லெவன்:

ரியான் ரிக்கெல்டன், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, ஐடன் மார்க்ராம், டெவால்ட் ப்ரூவிஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், லுங்கி நிகிடி, மற்றும் ஓட்னியல் பார்ட்மேன்.

சதமடித்த கோலி.. மனைவி அனுஷ்கா சர்மாவின் பதிவு..
ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. புத்தாண்டில் வருகிறது புதிய வசதி!
லாட்டரி மூலம் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்
ஓய்வு குறித்து முதன்முறையா மனம் திறந்த கமல்ஹாசன்!