Rishabh Pant Century Record: 93 ஆண்டுகளில் முதல் முறை! இந்திய அணிக்காக சிறப்பு சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

IND vs ENG 1st Test: லீட்ஸில் நடந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்டில், ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து வரலாறு படைத்தார். இது இந்திய விக்கெட் கீப்பர்களின் வரலாற்றில் முதல் முறை. முதல் இன்னிங்ஸில் 134 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களும் எடுத்தார். இது அவருடைய 8வது டெஸ்ட் சதம். இங்கிலாந்து மண்ணில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

Rishabh Pant Century Record: 93 ஆண்டுகளில் முதல் முறை! இந்திய அணிக்காக சிறப்பு சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

ரிஷப் பண்ட்

Published: 

23 Jun 2025 20:29 PM

லீட்ஸில் நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் (IND vs ENG 1st Test) 2 இன்னிங்ஸிலும் சதம் அடித்து ரிஷப் பண்ட் புதிய சாதனை படைத்தார். முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் எடுத்திருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பண்ட், 2வது இன்னிங்ஸிலும் மற்றொரு சதம் அடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் வரலாற்றில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரிஷப் பண்ட் (Rishabh Pant) படைத்தார். அதேநேரத்தில், டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதன்மூலம், இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளார்.

சிறப்பு சாதனை:

இந்திய அணி தனது முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியை கடந்த 1932ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இதன்மூலம், 93 ஆண்டுகால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்ததில்லை. இப்போது, ரிஷப் பண்ட் இவ்வாறு செய்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.

எட்டாவது டெஸ்ட் சதம்:

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட், 130 பந்துகளில் தனது 8வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையுடன், ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த ஏழாவது இந்தியர் என்ற பெருமையையும் படைத்தார்.

இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் 2 சதங்கள் அடித்த வீரர்கள்:

  • விஜய் ஹசாரே
  • சுனில் கவாஸ்கர் ( 3 முறை)
  • ராகுல் டிராவிட் (2 முறை)
  • விராட் கோலி
  • அஜிங்க்யா ரஹானே
  • ரோஹித் சர்மா
  • ரிஷப் பண்ட்

இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமை:

ஆண்டி ஃப்ளவருக்குப் பிறகு ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். ஜிம்பாப்வே அணியின் ஜாம்பவான் ஆண்டி ஃப்ளவர் கடந்த 2001ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 142 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 199 ரன்களும் எடுத்திருந்தார். இப்போது, ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்களும் எடுத்துள்ளார்.

 

Related Stories
India vs England 5th Test: வெளியேறிய ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்..! புது கேப்டனுக்கு கீழ் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணிக்கு சாதகமா?
World Legends Championship 2025: WLC அரையிறுதியை புறக்கணிக்கிறதா இந்திய அணி..? பதட்டத்தில் பாகிஸ்தான்.. யாருக்கு பின்னடைவு..?
Abhishek Sharma: வெறும் 17 டி20 சர்வதேச போட்டிகள்! ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!
India – England 5th Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?
India – England 5th Test: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?
India’s Kennington Oval Record: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?