IND W vs AUS W Semi Final: பைனலுக்கு யார்..? மோதப்போகும் இந்தியா – ஆஸ்திரேலியா..! மழையால் போட்டி பாதிப்பா?
ICC Womens World Cup 2025 Semi Final: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அக்யூவெதர் தகவலின்படி, போட்டி நடைபெறும் நாளான இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் (ICC Womens World Cup) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலிய மகளிர் அணியும் (IND W vs AUS W) இன்று அதாவது 2025 அக்டோபர் 30ம் தேதி மோதுகிறது. இந்த போட்டியானது நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கு நடுவே, வானிலை ஆய்வு அறிக்கையின்படி மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிக்கு ஒரு ரிசர்வ் நாள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மைதானத்தில் இந்தியாவின் கடைசி லீக் கட்ட போட்டியான வங்கதேசத்திற்கு எதிரான போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், வானிலை அறிக்கை, போட்டியை எங்கே காண்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
இந்தியா vs ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டிக்கான வானிலை:
Strong focus 💪
Positive vibes ☺#TeamIndia putting in the work in training ahead of the #CWC25 semi-final 🆚 Australia 👌#WomenInBlue | #INDvAUS pic.twitter.com/Li7H4XHYj7— BCCI Women (@BCCIWomen) October 29, 2025
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அக்யூவெதர் தகவலின்படி, போட்டி நடைபெறும் நாளான இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. டாஸ் போடும் போது, பிற்பகல் 2:30 மணியளவில் மழை பெய்ய 20 முதல் 25 சதவீதம் வரை வாய்ப்பு உள்ளது. போட்டி முழுவதும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளது.




ஐ.சி.சி விதிகளின்படி, நாக் அவுட் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிகளுக்கு ஒரு ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி போட்டி முடிவு செய்யப்படாவிட்டால், போட்டி நாளை அதாவது 2025 அக்டோபர் 31 ஆம் தேதி வரை நடத்தப்படலாம். இருப்பினும், நாளை அதாவது 2025 அக்டோபர் 31 ஆம் தேதிக்கான முன்னறிவிப்பு இன்று அதாவது 2025 அக்டோபர் 30 ஆம் தேதியை விட அதிக மழை பெய்யும். வெள்ளிக்கிழமை மழை பெய்ய 80 சதவீத வாய்ப்பு உள்ளது, அதாவது இரண்டு நாட்களிலும் போட்டி முடிவடையாமல் போகலாம். போட்டி முடிவடையவில்லை என்றால், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ALSO READ: இந்தியா-ஆஸ்திரேலியா உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெறாதா..? கொட்டப்போகும் கனமழை!
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை நேரடியாக எங்கே பார்ப்பது..?
இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஜியோஹாட்ஸ்டார் ஆப்-பில் நேரடி ஒளிபரப்பை காணலாம். போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 30 ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்குத் தொடங்கும். டாஸ் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறும்.