Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Australia Womens Cricket Team: ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. போலீஸ் அதிரடி நடவடிக்கை!

Australia Women Cricketers Harassed in Indore: 2 ஆஸ்திரேலிய பெண் வீராங்கனைகளுக்கு பிரச்சனை இருப்பதைக் கண்டு, காரில் இருந்த ஒருவர் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். தொடர்ந்து, அந்த நபர் இருவரையும் விசாரித்து, காவல்துறை அதிகாரிகளுக்கு போன் செய்து, நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார்.

Australia Womens Cricket Team: ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை.. போலீஸ் அதிரடி நடவடிக்கை!
ஆஸ்திரேலிய மகளிர் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Oct 2025 18:25 PM IST

இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 மகளிர் உலகக் கோப்பையில் (ICC Womens Cricket World Cup) தோற்காத அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த பலம் மிக்க ஆஸ்திரேலிய மகளிர் அணி, இன்று அதாவது 2025 அக்டோபர் 25ம் தேதி நடைபெற்று வரும் லீக் சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஆனால் இந்த போட்டிக்கு முன்பு, ஆஸ்திரேலிய அணியின் (Australia Womens Cricket Team) 2 பெண் வீராங்கனைகள் பாலியல் ரீதியான வன்கொடுமையை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தனது கடைசி லீக் போட்டியை விளையாட இந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தது. இந்த நேரத்தில், அணியின் 2 வீராங்கனைகளும் ஹோட்டலில் இருந்து மற்றொரு ஹோட்டலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​பைக்கில் வந்த ஒருவர் அவர்களை கிண்டல் செய்தது மட்டுமல்லாமல், தகாத முறையில் தொட்டு நடந்து கொண்டுள்ளார்.

ALSO READ: இந்திய மகளிர் அணி அரையிறுதியில் யாரை எதிர்கொள்ளும்? அட்டவணை இதோ!

வீராங்கனைகளிடம் தவறான நடத்தை:


இந்தூரில் உள்ள ஹோட்டல் ரேடிசன் ப்ளூவிலிருந்து ஒரு ஹோட்டலுக்கு 2 ஆஸ்திரேலிய வீராங்கனைகள் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தால் பயந்துபோன இரண்டு வீராங்கனைகளும் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், பாதுகாப்பு அதிகாரி டேனி சிம்மன்ஸின் புகாரின் அடிப்படையில், MIG போலீசார் FIR பதிவு செய்தனர்.

கடந்த 2025 அக்டோபர் 23ம் தேதி காலை 11 மணியளவில் கஜ்ரானா சாலையில் இந்த சம்பவம் நடந்தது. 2 ஆஸ்திரேலிய பெண் வீராங்கனைகள் ஒரு ஓட்டலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​வெள்ளை சட்டை மற்றும் கருப்பு தொப்பி அணிந்த ஒரு பைக் ஓட்டுநர் அவர்களைப் பின்தொடர்ந்து தகாத முறையில் தொட்டு நடந்து கொண்டார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இரு வீரர்களும் உடனடியாக ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு அதிகாரி டேனி சிம்மன்ஸைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.

ALSO READ: ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.. ஏமாற்றத்துடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி!

குற்றம் சாட்டப்பட்ட அகீல் கான் கைது:

2 ஆஸ்திரேலிய பெண் வீராங்கனைகளுக்கு பிரச்சனை இருப்பதைக் கண்டு, காரில் இருந்த ஒருவர் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். தொடர்ந்து, அந்த நபர் இருவரையும் விசாரித்து, காவல்துறை அதிகாரிகளுக்கு போன் செய்து, நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார். வெளிநாட்டு வீராங்கனைகளிடம் இதுபோன்ற தகாத நடத்தை, காவல்துறை அதிகாரிகளை உடனடியாக நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது. புகாரின் அடிப்படையில், போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நேரத்தில், அந்த வழியாகச் சென்ற ஒருவர் சந்தேக நபரின் பைக் எண்ணைக் கவனித்தார். அதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அகீல் கான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல் உதவி ஆணையர் ஹிமானி மிஸ்ரா தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, சம்பவத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.