Virat Kohli Duck: தொடர்ந்து 2வது முறையாக டக் அவுட்.. கை அசைத்து சென்ற கோலி.. ஓய்வு முடிவா..?
Australia vs India 2nd ODI: விராட் கோலி 17 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். மேலும் அடிலெய்டில் நடந்த போட்டி அவரது 304வது ஒருநாள் போட்டியாகும். தொடர்ச்சியாக இரண்டு இன்னிங்ஸ்களில் அவர் டக்-அவுட்டாகாமல் ஆட்டமிழந்தது இதுவே முதல் முறை.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் (IND vs AUS 2nd ODI) இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சேவியர் பார்ட்லெட்டால் பந்தில் விராட் கோலி (Virat Kohli) எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். இதையடுத்து, விராட் கோலி நான் ஸ்ட்ரைக் எண்டில் இருந்த ரோஹித்துடன் ரிவ்யூ எடுப்பது தொடர்பாக பேசினார். பின்னர், ரிவ்யூ எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து கோலி மைதானத்தை விட்டு வெளியேறினார். ஒருநாள் வரலாற்றில் கோலி தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் ரன் எடுக்கத் தவறியது இதுவே முதல் முறை.
ALSO READ: கிரிக்கெட்டில் இனிமேல் இந்த ஷாட் நோ! நோ! புதிய விதியை கொண்டு வரும் ஐசிசி!
அடிலெய்டு ஓவலில் விராட் கோலிக்கு கடைசி போட்டியா..?
அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 பந்துகளை மட்டுமே சந்தித்து எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு விராட் கோலி அவுட்டாகி பெவிலியன் நோக்கித் திரும்பிச் செல்லும்போது அடிலெய்டு கூட்டத்தினரை கையசைத்து சென்றார். இதையடுத்து, விராட் கோலிக்கு இது கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம் என நினைத்த இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி அங்கீகாரம் செய்தனர். ஆஸ்திரேலிய ஸ்டேடியமாக இருந்தாலும், விராட் கோலி அடிலெய்டு ஓவல் ஸ்டேடியத்தின் அரசனாகவே இருந்தார். இதுவரை இந்த ஸ்டேடியத்தில் விராட் கோலி 976 ரன்கள் எடுத்துள்ளார். அடிலெய்டு ஸ்டேடியத்தில் வெளிநாட்டு வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
ரசிகர்களின் மரியாதையை ஏற்ற விராட் கோலி:
VIRAT KOHLI GONE FOR HIS SECOND DUCK OF THE SERIES!#AUSvIND | #PlayoftheDay | @BKTtires pic.twitter.com/jqIdvMeX9T
— cricket.com.au (@cricketcomau) October 23, 2025
இதுவே முதல் முறை:
விராட் கோலி 17 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். மேலும் அடிலெய்டில் நடந்த போட்டி அவரது 304வது ஒருநாள் போட்டியாகும். தொடர்ச்சியாக இரண்டு இன்னிங்ஸ்களில் அவர் டக்-அவுட்டாகாமல் ஆட்டமிழந்தது இதுவே முதல் முறை. பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் விராட் கோலி டக் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும், கோலி தொடர்ச்சியாக இரண்டு இன்னிங்ஸ்களில் டக்-அவுட்டாகாமல் ஆட்டமிழந்தது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டிகளில் 18 முறையும், டெஸ்ட் போட்டிகளில் 15 முறையும், டி20 போட்டிகளில் 7 முறையும் டக்-அவுட்டாகியுள்ளார்.
ALSO READ: அடுத்த போட்டியில் பெரிய ஸ்கோர் அடிப்பார்கள்… ரோகித் சர்மா – விராட் கோலிக்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு
விராட் கோலியின் 40வது டக்:
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி தற்போது மொத்தம் 40 டக்-அவுட்களை குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டக்-அவுட்களைக் கொண்ட முதல் 6 பேட்ஸ்மேன்களில் கோலி இப்போது 5வது இடத்தில் உள்ளார். இந்த சாதனைக்கான சாதனை இலங்கையின் சனத் ஜெயசூர்யாவின் வசம் உள்ளது. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 50 முறை டக்-அவுட்டாகாமல் இருந்தார்.