IND W vs AUS W: இந்தியா-ஆஸ்திரேலியா உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெறாதா..? கொட்டப்போகும் கனமழை!
ICC Womens World Cup 2025: கடந்த சில நாட்களில் மும்பையில் அவ்வப்போது மழை பெய்து வருவது. அடுத்த 48-72 மணி நேரத்தில் மும்பையில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது அரையிறுதியைப் பாதிக்கலாம்.
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் (2025 Womens World Cup) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா (India W vs Australia W) அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதி நடைபெறுகிறது. நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் விளையாட்டு அகாடமியில் நடைபெறும் இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் களத்தில் கடுமையாக போராடி இறுதிப்போட்டிக்கு முன்னேற முயற்சிக்கும். பலம் மிக்க ஆஸ்திரேலிய அணி இதுவரை அனைத்து லீக் போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு நுழைந்தது. அதேநேரத்தில், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 3 வெற்றி, 3 தோல்விகளுடன் அரையிறுதியை அடைந்தது. இதற்கிடையில், இந்தப் போட்டி குறித்து மோசமான செய்தி வருகிறது. மழையால் போட்டி தடைபடலாம், ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
போட்டியில் மழையா..?
கடந்த சில நாட்களில் மும்பையில் அவ்வப்போது மழை பெய்து வருவது. அடுத்த 48-72 மணி நேரத்தில் மும்பையில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது அரையிறுதியைப் பாதிக்கலாம். வருகின்ற 2025 அக்டோபர் 30ம் தேதி நவி மும்பையில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியின் போது பிற்பகலில் மழை பெய்ய 69 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இந்த நாளில் மொத்தம் 3.8 மி.மீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல செய்தி என்னவென்றால், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், 2025 அக்டோபர் 31ம் தேதி கூட நவி மும்பையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, போட்டி ரத்து செய்யப்படலாம்.
மழை காரணமாக ரிசர்வ் நாளில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி நடைபெறவில்லை என்றால், அது ஆஸ்திரேலியாவுக்கு நேரடியாகப் பயனை தரும். ஏனெனில் இந்தப் போட்டியில் இதுவரை அவர்கள் ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால், புள்ளிகள் அட்டவணையின் அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். அதாவது அதிக புள்ளிகளைப் பெற்ற முதலிடத்தில் உள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.




ALSO READ: இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்?
ஆஸ்திரேலியா இதுவரை 13 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இந்தியா 6 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில், ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்திய அணி இதை ஒருபோதும் விரும்பாது. எனவே, போட்டி நடைபெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும்.