ICC New Rules: டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் முக்கிய மாற்றம்.. கிரிக்கெட்டில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் ஐசிசி..!

New Cricket Rules 2025: ஐசிசி புதிய கிரிக்கெட் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் கூடுதல் 5 மாற்று வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒருநாள் போட்டிகளில் பந்து மாற்று விதிகள் மாற்றப்பட்டுள்ளன. 34 ஓவர்கள் வரை இரண்டு புதிய பந்துகள், அதன்பின் ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த மாற்றங்கள் 2025 ஜூன் 17 முதல் அமலுக்கு வருகின்றன. பவுண்டரி கேட்ச் மற்றும் டிஆர்எஸ் விதிகளில் மேலும் மாற்றங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

ICC New Rules: டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் முக்கிய மாற்றம்.. கிரிக்கெட்டில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தும் ஐசிசி..!

இந்திய கிரிக்கெட் அணி

Updated On: 

31 May 2025 16:43 PM

கிரிக்கெட் விளையாட்டை மேலும் சுவாரஸ்யமாக்க புதிய விளையாட்டு விதிகளை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) முடிவு செய்துள்ளது. இது பந்திற்கும், பேட்ஸ்மேனுக்கும் இடையில் சமமான போட்டியை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025ன் (World Test Championship) இறுதிப்போட்டியானது ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா (Australia vs South Africa) இடையே வருகின்ற 2025 ஜூன் 11 முதல் லாட்ர்ஸில் தொடங்குகிறது. இந்த முக்கிய போட்டிக்கு முன்னதாக, ஐசிசி சில புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. ஐசிசி வகுத்துள்ள இந்த புதிய விதிகள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டிலும் செயல்படுத்தப்பட உள்ளன. இதில், ஒருநாள் போட்டிகளில் ஒரே பந்தை பயன்படுத்தும் விதிகளும் அமல்படுத்தப்படவுள்ளது.

புதிய விதிகள்:

புதிய விதிகள் வருகின்ற 2025 ஜூன் 17ம் தேதி இலங்கைக்கும் வங்கதேசத்திற்கும் இடையில் காலியில் தொடங்கும் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து அமலுக்கு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் முன்பு அணிகள், கூடுதலாக 5 மாற்று வீரர்கள் பெயர்களை பட்டியலிட வேண்டும். இந்த வீரர்கள் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், வேகப்பந்து வீச்சாளர், சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் என்ற வரிசையில் இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டியின்போது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், போட்டி அம்பயரிடம் தெரிவித்து, தற்போதைய லைக்-ஃபார்-லைக் விதிகளை பயன்படுத்தி, மாற்று வீரரை போட்டியில் விளையாட அனுமதிக்கலாம்.

பந்து மாற்று முறை:

பந்து மாற்று முறையின் புதிய விதிகள் குறித்து ஐசிசி வெளியிட்ட தகவலில், “ ஒருநாள் போட்டிகளில் 1 முதல் 34 ஓவர்களுக்கு 2 புதிய பந்துகளை பயன்பாட்டில் இருக்கும். 34 ஓவர்கள் முடிந்ததும், 35வது ஓவர் தொடங்குவதற்கு முன்பும், பீல்டிங் அணி 35 முதல் 50 ஓவர்கள் வரை பயன்படுத்தப்படும் 2 பந்துகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். இது தவிர, முதல் இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பு போட்டி 25 ஓவர்களாகவோ அல்லது அதற்கு குறைவாகவோ குறைக்கப்பட்டால், ஒவ்வொரு அணிக்கும் அதன் இன்னிங்ஸுக்கு ஒரு புதிய பந்து மட்டுமே வழங்கப்படும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த 2 பந்து விதியை நீக்கும் திட்டம் ஐசிசி நீக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக, இந்த விதியின் கீழ், இரு முனைகளிலிருந்தும் 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக பந்து வீச்சாளர்கள் ஸ்விங் மற்றும் சீம் இயக்கத்தில் குறைப்பை எதிர்கொண்டனர். ஆனால் 2025 ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, ஒருநாள் போட்டிகளில் இப்போது 34 ஓவர்களுக்கு இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படும். இதற்குப் பிறகு, 35 முதல் 50 ஓவர்கள் வரை 1 பந்து மட்டுமே பயன்படுத்தப்படும். மேலும், பவுண்டரி கேட்சுகள் மற்றும் டி.ஆர்.எஸ் விதி மாற்றங்கள் குறித்த விதி மாற்றங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.